- Advertisement -
ஐ.பி.எல்

ஜஸ்ப்ரித் பும்ராவை ஜாம்பவான்கள் மால்கம் மார்ஷல், வாசிம் அக்ரமுடன் கம்பேர் பண்ணாதீங்க.. அஸ்வின்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டரில் குஜராத்தை தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 229 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய குஜராத்துக்கு தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஜோடி சேர்ந்து 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தார்கள்.

ஆனால் அப்போது பவுலிங் செய்த நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா துல்லியமான யார்கர் பந்தால் வாஷிங்டன் சுந்தரை கிளீன் போல்ட்டாக்கி தெறிக்க விட்டார். அதைப் பயன்படுத்திய மும்பை எதிர்ப்புறம் போராடிய சாய் சுதர்சனையும் அவுட்டாக்கியது. அதனால் முதல் முறையாக எலிமினேட்டர் போட்டியில் வென்ற மும்பை குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப்பை எதிர்கொள்ளத் தகுதி பெற்றது.

- Advertisement -

கம்பேர் பண்ணாதீங்க:

அந்த வகையில் அப்போட்டியில் முக்கிய நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா வெற்றியில் முக்கிய பங்காற்றி தம்மை நம்பர் ஒன் பவுலர் என்பதை நிரூபித்தார். 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் கடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டார். அதனால் வாசிம் அக்ரம், மால்கோம் மார்ஷல் போல ஜஸ்ப்ரித் பும்ராவும் வரலாற்றின் மகத்தான வேகப்பந்து வீச்சாளர் என்று பலரும் பாராட்டினர்.

இந்நிலையில் வாசிம் அக்ரம், மார்ஷல் ஆகியோருடன் பும்ராவை ஒப்பிட வேண்டாம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ஏனெனில் இந்தியாவில் ஜஸ்ப்ரித் பும்ரா தம்முடைய சொந்த வழியில் சொந்தப் பெயரில் தனித்துவமான மரபை உருவாக்கி வரும் ஜாம்பவான் என்று அஸ்வின் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:

“மால்கோம் மார்ஷல் பவுலிங்கை நான் பார்த்ததில்லை. ஆனால் அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். வாசிம் அக்ரம் பவுலிங்கை பார்த்துள்ளேன். அவர் இந்திய அணிக்கு தூங்க முடியாத இரவுகளை கொடுத்தவர். ஆனால் அவர்களைப் போன்ற தலைமுறைகளை கடந்த வீரர்களுடன் ஒப்பிடுவது தவறான விஷயமாகும். இன்றைய உலகில் இந்திய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை நாம் மகத்தானவர்களாக கருதுகிறோம்”

இதையும் படிங்க: ஆர்சிபி மட்டும் கோப்பை ஜெய்ச்சுட்டா அவர கையிலேயே பிடிக்க முடியாது.. நாசர் ஹுசைன், ஆதர்டன் கிண்டல்

“நான் இதை என்னுடைய சொந்த தாய் மொழியில் பேசுகிறேன். ஏனெனில் தமிழ் மக்கள் அனைவரும் இதை பார்க்கிறார்கள். ஜஸ்ப்ரித் பும்ராவுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் நீண்ட தூரம் ஓடிவந்து சாதுரியமாக திட்டங்களை செயல்படுத்தும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அந்த வகையில் ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு பவுலராக வென்றுள்ளார். இந்தியாவில் வேகப்பந்து வீச்சுக்கு அவர் ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது” என்று கூறினார்.

- Advertisement -