- Advertisement -
ஆசிய கோப்பை

அப்படி அடிக்க இந்தியா ஒன்னும் ஓமன் இல்ல.. பாகிஸ்தானை வீழ்த்திய வேற லீக் இந்தியா பற்றி.. அஸ்வின் பேட்டி

ஆசியக் கோப்பை 2025 தொடரில் நடப்புச் சாம்பியன் இந்தியா தங்களுடைய முதல் 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. குறிப்பாக 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக தோற்கடித்தது. அந்தப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தைப் பெற்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 127/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஃபர்ஹான் 40, ஷாஹின் அப்ரிடி 33* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 2, அக்சர் படேல் 2, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்தியா 15.5 ஓவரில் இலக்கைத் தொட்டு எளிதாக வென்றது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 31, கேப்டன் சூரியகுமார் யாதவ் 47*, திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

ஓமன்னு நினைச்சீங்களா:

பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஆயுப் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் கடந்தப் போட்டியில் கத்துக்குட்டி ஓமனை தோற்கடித்தது போல் இந்தியாவையும் வீழ்த்தி விடலாம் என்ற எண்ணத்துடன் பாகிஸ்தான் வந்ததாக ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஆனால் பாகிஸ்தானை அசால்டாக தோற்கடித்த இந்தியா தங்களை நம்பர் டி20 கிரிக்கெட் அணி என்று நிரூபித்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

மேலும் தற்போதைய பாகிஸ்தான் அணியால் தொட முடியாதளவுக்கு இந்திய அணி தரத்தில் உயர்ந்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “சாய்ம் ஆயுப் தவிர்த்து பாகிஸ்தான் அணியில் நிறைய கிளாஸ் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இரு அணிகளின் பேட்டிங் வரிசையைப் பொறுத்த வரை முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா இறங்கி வந்து ஷாஹின் அப்ரிடிக்கு எதிராக அடித்தார்”

- Advertisement -

உயர்தரத்தில் இந்தியா:

“அதற்கு நேர்மாறாக முகமது ஹாரிஸ் வெள்ளைக்கோட்டில் வேரூன்றி ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய லைனுக்கு குறுக்கே அடிக்க முயற்சித்ததால் பந்து நேராக கைக்குச் சென்றது. நீங்கள் பும்ராவுக்கு எதிராக அது போன்ற ஷாட்டை அடிக்க முடியாது. ஏனெனில் இது ஓமன் அணி கிடையாது. அந்த அணியின் பவுலர்களை நீங்கள் அடிப்பது போல் இந்திய பவுலர்களை அடிக்க முடியாது”

இதையும் படிங்க: சூரியகுமார் பெயரை விலங்குடன் ஒப்பிட்டு திட்டிய யூசுப் யுஹானா.. இந்தியாவையும் மட்டமாக விமர்சனம்

“தந்திரபாயங்கள் அடிப்படையிலும் பாகிஸ்தான் மிகவும் சுமாராக இருந்தது. கால் நகர்வு இல்லாமலேயே ஹசன் நவாஸ் அடிக்க முயற்சித்தார். மறுபுறம் திலக் வர்மாவை பாருங்கள். ரிவர்ஸ் ஸ்வீப் அடித்த அவர் ஆஃப் சைட், ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டுகளையும் அடித்தார். எனவே தந்திபோயம், டெக்னிக்கள், மூலோபாயம் ஆகிய அடிப்படையில் இந்தியா வித்தியாசமான லீக்கில் இருக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -