ஸ்ரீகாந்த் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. என் வாழ்க்கையே மாத்திடுச்சு.. 2008 பின்னணியை பகிர்ந்த அஸ்வின்

Ashwin and Srikkanth
- Advertisement -

தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மார்ச் 16ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு வாரியம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தரம்சாலாவில் நடந்த கடைசிப் போட்டியில் விளையாடிய அவர் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது வீரர் என்ற சாதனை படைத்து மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியில் பங்காற்றினார்.

மேலும் அறிமுகப் போட்டியிலும் 100வது போட்டியிலும் 5 விக்கெட் ஹால் எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் அதே தொடரில் 500 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்திய வீரராகவும் வரலாறு படைத்திருந்தார். அந்த வகையில் தமிழ்நாட்டு மண்ணில் பிறந்து இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற வரலாறு படைத்த அவருக்கு தமிழ்நாடு வாரியம் பாராட்டு விழா நடத்தியது.

- Advertisement -

ஸ்ரீகாந்த் சொன்ன வார்த்தை:
அந்த விழாவில் அஷ்வினுக்கு 500 விக்கெட்டுகளை பிரதிபலிக்கும் வகையில் 500 தங்க நாணயங்கள் அடங்கிய நினைவுப் பரிசு, செங்கோல் மற்றும் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கி தமிழ்நாடு வாரியம் கௌரவித்தது. மேலும் அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் அஸ்வினை பாராட்டி பேசினார்கள்.

இறுதியில் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணியில் தமக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்ததை பற்றிய பின்னணியை அஸ்வின் பகிர்ந்து பேசினார். அவருடைய பரிந்துரை தம்முடைய வாழ்க்கையை மாற்றியதாகவும் தெரிவித்த அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த நிகழ்வை திரும்பிப் பார்த்தால் கண்டிப்பாக இன்று இரவு என்னால் தூங்க முடியாது. 2008இல் நான் ஜோலி ரோவர்ஸ் அணிக்காக இந்தியா சிமெண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடினேன். அந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்த நான் ஆட்டநாயகனாக வீட்டுக்கு திரும்பினேன். ஸ்ரீகாந்த் அன்றைய நாள் இரவில் தலைமை விருந்தினராக வந்திருந்தார். அப்போது மைக்கை எடுத்த அவர் “அஸ்வின் நீ சூப்பராக பந்து வீசினாய். நீ கண்டிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்று முத்தையா முரளிதரனிடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று சொன்னார்”

இதையும் படிங்க: எப்போவும் விராட் கோலியை விட சச்சின் தான் பெஸ்ட் பேட்ஸ்மேன்.. இதான் காரணம்.. பிரவீன் குமார்

“அப்போது நான் சிஎஸ்கே அணியில் இல்லை. அந்த சமயத்தில் உள்ளூர் வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் அப்போது சிஎஸ்கே அணியின் தலைமை இயக்குனர் காசி விஸ்வநாதனிடம் “நீங்கள் அஸ்வினை அணியில் எடுக்கவில்லையா?” என்று ஸ்ரீகாந்த் கேட்டார். அந்த குறிப்பிட்ட வரி என்னுடைய வாழ்க்கையை மாற்றி விட்டது. ஏனெனில் அடுத்த நாள் எனக்கு சிஎஸ்கே அணியில் விளையாடுவதற்கான ஒப்பந்தம் கிடைத்தது” என்று கூறினார்.

Advertisement