எப்போவும் விராட் கோலியை விட சச்சின் தான் பெஸ்ட் பேட்ஸ்மேன்.. இதான் காரணம்.. பிரவீன் குமார்

Praveen Kumar 4
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் இந்திய வீரர் விராட் கோலி மிகச் சிறந்த வீரராக கருதப்படுகிறார். ஏனெனில் கடந்த 10 வருடத்திற்கு மேலாக உலகின் அனைத்து இடங்களிலும் அனைத்து டாப் பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு வரும் அவர் 80 சதங்களை அடித்து 26000க்கும் மேற்பட்ட ரன்கள் விளாசி இந்தியாவின் பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

அந்த வகையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வுக்கு பின் அவருடைய இடத்தை விராட் கோலி நிரப்பி வருகிறார் என்றே சொல்லலாம். சொல்லப்போனால் கடந்த 2023 உலகக் கோப்பையில் 765 ரன்கள், அதிவேகமாக 10,000 ஒருநாள் ரன்கள் போன்ற சாதனைகளில் சச்சினையே முந்தியுள்ள விராட் கோலி புதிய உலக சாதனைகளை படைத்து வருகிறார். அதன் காரணமாக சச்சினை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்று தற்காலத்தைச் சேர்ந்த ஒரு தரப்பு ரசிகர்கள் பேசுவது வழக்கமாகும்.

- Advertisement -

என்றும் சச்சின்:
இந்நிலையில் எப்போதும் விராட் கோலியை விட வரலாற்றின் மகத்தான பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் என்று முன்னாள் இந்திய வீரர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தை சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சச்சின் சார் 1989இல் அறிமுகமானார். வெள்ளைப் பந்து மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய அவர் ரிவர்ஸ் பந்துகளையும் எதிர்கொண்டார்”

“அவர் 2 பக்கமும் புதிய பந்தை எதிர்கொண்டார். அந்த வகையில் எப்படியும் அவர் 400 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் விளையாடியிருப்பார் என்று நினைக்கிறேன். சச்சின் எப்போதுமே தனித்துவமான வீரர். விராட் கோலியுடன் அவரை ஒப்பிட முடியாது. சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர். ஆம்ப்ரோஸ், வால்ஸ், டொனால்ட், வாசிம் அக்கரம், பிரட் லீ போன்ற உலகின் மகத்தான பவுலர்களை அதுவும் அவர்களுடைய கேரியரின் உச்சத்தில் சச்சின் எதிர்கொண்டார்”

- Advertisement -

“டெஸ்ட் கிரிக்கெட்டில் அப்போதைய பந்துகள் அதிகமாக நகரும். அப்போதைய மைதானங்களும் கடினமாக இருக்கும். அதனால் அந்த காலங்களில் 270 ரன்கள் அடித்தாலே உங்களால் வெல்ல முடியும். மறுபுறம் விராட் கோலி விளையாடும் தற்போதைய நேரம் சற்று மாறிவிட்டது. தற்போது இருபுறமும் புதிய பந்துகள் இருப்பதில்லை. ரிவர்ஸ் ஸ்விங் முற்றிலும் நின்று விட்டது. மைதானங்கள் பேட்டிங்க்கு சாதகமாக மாறியுள்ளது”

இதையும் படிங்க: நானே பாத்தேன்.. 2023 உ.கோ ஃபைனலில் இந்தியா அந்த தப்பை பண்ணாங்க.. பற்றி ஃகைப் விமர்சனம்

“எனவே சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது. 400 ஒருநாள் போட்டிகள் விளையாடுவது மிகவும் கடினம். அந்த வகையில் சாதகமான சூழ்நிலைகளால் விராட் கோலி மிகவும் விரைவாக சச்சினின் சாதனைகளை உடைத்துள்ளார்” என்று கூறினார். அவர் கூறுவது போல சச்சின் விளையாடிய காலத்திற்கும் விராட் கோலி விளையாடும் தற்போதைய காலத்திற்கும் அடிப்படை விதிமுறையிலேயே நிறைய மாற்றங்கள் பேட்டிங்க்கு சாதகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement