நானே பாத்தேன்.. 2023 உ.கோ ஃபைனலில் இந்தியா அந்த தப்பை பண்ணாங்க.. பற்றி ஃகைப் விமர்சனம்

Mohamed Kaif
- Advertisement -

இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற 2023 ஐசிசி உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா தட்டிச் சென்றது. அந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் ஆரம்பம் முதலே மிரட்டலாக செயல்பட்டு வந்த இந்தியா செமி ஃபைனலில் முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்து தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்தது. அதனால் 2011 போல கண்டிப்பாக இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால் அகமதாபாத் மைதானத்தில் நடந்த மாபெரும் இறுதிப்போட்டியில் வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா பரிதாபமாக தோற்றது. அந்த போட்டியில் சுழலுக்கு சாதகமான மைதானத்தை அமைத்ததே இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்ததாக ஹர்பஜன் சிங் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் ஃபைனலுக்கு முன்பாக 3 நாட்கள் தொடர்ந்து அஹமதாபாத் பிட்ச்சை ராகுல் டிராவிட் – ரோஹித் சர்மா ஆகியோர் நோட்டமிட்டதை தாம் பார்த்ததாக முகமது கைஃப் கூறியுள்ளார்.

- Advertisement -

தோல்விக்கு காரணம்:
அதனால் இறுதியில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக அமைத்ததே இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நான் அங்கே 3 நாட்கள் இருந்தேன். ஃபைனலுக்கு 3 நாட்கள் முன்பாக ஒவ்வொரு நாளும் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் பிட்ச்சை கண்காணித்தனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் பிட்ச்க்கு அருகாமையில் ஒரு மணி நேரம் நின்று விவாதித்தனர்”

“பின்னர் பிட்ச்சின் வண்ணம் மாறுவதை நான் பார்த்தேன். அதில் தண்ணீர் அடிக்கப்படவில்லை. புற்களும் இல்லை. அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு மெதுவான பிட்ச்சை இந்தியா வழங்க விரும்பியது. இதை மக்களும் ரசிகர்களும் நம்பவில்லை என்றாலும் இதுவே உண்மையாகும். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இந்தியா மெதுவான பிட்ச்சை கொடுக்கலாம் என்று விரும்பியது”

- Advertisement -

“அது நம்முடைய தவறாகும். இங்கே பலரும் நாங்கள் பிட்ச்சில் தலையிடுவதில்லை. மைதான பராமரிப்பாளர்கள் தான் பிட்ச்சை உருவாக்குகின்றனர் என்று சொல்கிறார்கள். அது குப்பையாகும். ஆடுகளத்தை சுற்றி நீங்கள் நகரும் போது “தயவு செய்து தண்ணீர் அடிக்காதீர்கள். புற்களை குறையுங்கள்” என்ற 2 வரிகளையே சொல்ல வேண்டும். பொதுவாக இது நிகழும். அதுவே உண்மை”

இதையும் படிங்க: மீசை வெச்ச இந்திரன் மீசையில்லாத சந்திரன் மாதிரி.. ரஜினிகாந்த் ஸ்டைலில் அஷ்வினை பாராட்டிய ஜடேஜா

“அந்தப் போட்டி சொந்த மண்ணில் நடந்ததால் அதை நாம் சற்று அதிகமாக செய்து விட்டோம். மறுபுறம் பிட்ச் மெதுவாக இருந்தால் முதலில் பேட்டிங் செய்யும் போது ஆரம்பத்தில் ரன்கள் குவிப்பது கடினமாக இருக்கும் என்பதை சென்னையில் பட் கமின்ஸ் கற்றுக்கொண்டார். யாருமே ஃபைனலில் முதலில் பந்து வீச விரும்ப மாட்டார்கள். ஆனால் கமின்ஸ் அதை செய்தார். எனவே ஆடுகளத்தில் மாற்றம் செய்யும் போது நாம் குழப்பமடைந்தோம்” என்று கூறினார்.

Advertisement