சிஎஸ்கேவை யூடியூபில் விமர்சித்த விவகாரம்.. ரசிகர்கள் விளாசலால்.. வீடியோவை திரும்ப பெற்ற அஸ்வின் விளக்கம்

R ashwin
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டிகள் மும்பைக்கு எதிராக வந்தது. ஆனால் அடுத்த 3 கோடிகளில் பெங்களூரு, டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக சென்னை ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்தது. குறிப்பாக தங்களது கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக 17, டெல்லிக்கு எதிராக 15 வருடங்கள் கழித்து சென்னை அவமானத் தோல்விகளை சந்தித்தது.

முன்னதாக இந்த வருடம் சென்னை அணிக்காக தமிழகத்தின் நட்சத்திர மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 9.75 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார். இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்த அவர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். அதற்கு முன்புலிருந்தே யூடியூப் பக்கத்தில் தம்முடைய பெயரில் கிரிக்கெட்டை பற்றிய அலசல் வீடியோக்களை ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்து வருகிறார்.

- Advertisement -

ரசிகர்கள் விளாசல்:

அது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அனைவரும் அறிவோம். அந்த சூழ்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளிலும் அஸ்வின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மறுபுறம் இந்த வருடம் புதிதாக வாங்கப்பட்ட ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அஹ்மத் அபாரமாக பவுலிங் செய்து அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ஊதா தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்.

ஆனால் ஏற்கனவே அஸ்வின், ஜடேஜா இருக்கும் நிலையில் சென்னை நிர்வாகம் நூர் அஹ்மதை வாங்கியிருக்கக்கூடாது என்று அஸ்வின் யூடியூப் பக்கத்தின் வீடியோவில் பிரபல அனலைஸ்டு பிரசன்னா தெரிவித்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் சிஎஸ்கே அணிக்கு விளையாடிக்கொண்டு சிஎஸ்கே அணி எதிராகவே பேசுகிறீர்களா? என்று விளாசினர். அதனால் அஸ்வின் உடனடியாக அந்த வீடியோ நீக்கினர்.

- Advertisement -

அஸ்வின் விளக்கம்:

இந்நிலையில் அது பற்றியும் இனிமேல் சிஎஸ்கே சம்மந்தமாக விவாதிக்கப்படாது என்பது பற்றியும் அஸ்வின் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு. “கடந்த வாரத்தில் இந்தத் தளத்தில் நடந்த விவாதங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு அந்த விஷயங்களை எவ்வாறு விளக்குவது என்பதை நாங்கள் கவனத்தில் கொள்ள விரும்புகிறோம்”

இதையும் படிங்க: இந்த உண்மையை ஒப்புக்கொண்டு தோனி வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது – மேத்யூ ஹைடன் ஓபன்டாக்

“இந்த சீசன் முழுவதும் சிஎஸ்கே போட்டிப் பற்றிய முன்னோட்டங்கள் மற்றும் மதிப்புரைகள் இரண்டையும் உள்ளடக்குவதில் இருந்து விலக விரும்புகிறோம். எங்கள் நிகழ்ச்சிகளில் வரும் விஷயங்களின் ஒருமைப்பாடு மற்றும் உரையாடல்கள் உண்மையாக இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். எங்கள் விருந்தினர் தெரிவித்த கருத்துக்கள் அஸ்வினின் தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை. நிகழ்ச்சியின் உணர்வோடு சிந்தனையுடன் ஈடுபடும் அனைவரையும் நாங்கள் பாராட்டுகிறோம்” என்று கூறியுள்ளார்.

Advertisement