ரிஷப் பண்ட் கேப்டனாக செஞ்சது சரில்ல.. திக்வேஷை அவதூராக பேசி காயப்படுத்தாதீங்க.. அஸ்வின் விளாசல்

R Ashwin 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்தது. முன்னதாக அந்தப் போட்டியில் லக்னோவின் திக்வேஷ் ரதி வீசிய 17வது ஓவரின் முதல் பந்தில் ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் சர்மா கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதை சோதித்த நடுவர்கள் பக்கவாட்டில் இருக்கும் வெள்ளைக்கோட்டின் மீது திக்வேஷ் கால் பட்டதால் அதை நோபால் என்று அறிவித்து ஃப்ரீ ஹிட் வழங்கினார்கள்.

தெரியாதத் தனமாய் அந்த தவறை செய்த திக்வேஷ் மீண்டும் வீசிய பந்தில் ஜிதேஷ் சர்மா சிக்ஸர் அடித்தது வேறு கதை. அதே ஓவரின் 5வது பந்தில் எதிர்ப்புறம் ஜிதேஷ் சர்மா பந்தை வீசுவதற்கு முன்பாகவே வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினார். அதை சரியாக கவனித்த திக்வேஷ் மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். உடனே நேரலையில் அவரை வர்ணனையாளர்கள் நேர்மைக்கு புறம்பாக செயல்பட்டதாக விமர்சித்தனர்.

- Advertisement -

அவதூறு வேண்டாமே:

அதே போல ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக திட்டி தீர்த்தனர். அடுத்த சில நிமிடங்களில் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் அந்த முடிவை வாபஸ் பெற்றதால் சர்ச்சை தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் விதிமுறைக்கு உட்பட்டு திக்வேஷ் ரன் அவுட் செய்ததை அநியாயம் என்று வர்ணனையாளர்கள் அவதூராக பேசியதாக அஸ்வின் சாடியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “லக்னோ உரிமையாளராக இருந்தால் நான் ஜிதேஷ் விக்கெட்டை வேண்டும் என்று விரும்புவேன்”

“அதை செய்த திக்வேஷ் நடுவரிடம் அவுட் கேட்டார். அதை ஏற்றுக்கொண்ட நடுவரும் சரியான முடிவை கொடுத்தார். அப்போது ரிஷப் பண்ட் முடிவை வாபஸ் பெற்றார். உடனே வர்ணனையாளர்கள் என்ன ஒரு நேர்மைத்தன்மை என்று அவரை பாராட்டினார்கள். இதிலிருந்து தான் அனைவரையும் வெளியே வர சொல்கிறேன். சிறப்பான சதத்தை அடித்த ரிஷப் பண்ட் இன்னும் நிறைய சாதனைகளைப் படைப்பார்”

- Advertisement -

அஸ்வின் சாடல்:

“இங்கிலாந்து மண்ணில் அவர் இந்தியாவின் வெற்றிக்காக உதவ உள்ளதை பார்க்க காத்திருக்கிறேன். நான் அவருடைய ரசிகன். ஆனால் கேப்டனாக அவர் தன்னுடைய வீரருக்கு ஆதரவை கொடுத்திருக்க வேண்டுமே தவிர முடிவை வாபஸ் வாங்கி சிறியவராக உணர வைத்திருக்கக்கூடாது. வர்ணனையாளர்களான நீங்கள் திக்வேஷின் தந்தையாக உங்களை நினைத்துப் பாருங்கள். நீங்கள் அவரை கோடிக்கணக்கான மக்கள் முன்னிலையில் விமர்சித்துள்ளீர்கள்”

இதையும் படிங்க: லக்னோ அணியை வீழ்த்திய கையோடு தல தோனியின் சாதனையை முறியடித்த ஜிதேஷ் சர்மா – விவரம் இதோ

“ஜோஸ் பட்லரை நான் மன்கட் செய்த அடுத்த வருடன் டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இனிமேல் யாரையும் அப்படி செய்யாதீர்கள் என்று என்னிடம் சொன்னார். அதற்கு முடியாது என்று சொன்னேன். பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அதையே சொன்ன போது விதிமுறையைப் பின்பற்றுகிறேன் என்று சொன்னேன். திக்வேஷ் போன்ற இளம் வீரரை கோடிக்கணக்கான மக்கள் முன்பு அவதூறாக பேசாதீர்கள். அப்படி அவுட் செய்தால் மட்டும் ஏன் ஒரு பவுலரை சிறிதாக பார்க்கிறீர்கள்? நீங்கள் அவ்வாறு நினைப்பது அவமானப்படுத்துவதாகும். இது அவருடைய மனதில் வடுவை ஏற்படுத்தியிருக்கும்” என்று கூறினார்.

Advertisement