லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 70-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது அந்த அணியை 6 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஒன்பதாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் தற்போது புள்ளி பட்டியலில் பெங்களூரு அணி 19 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறியுள்ளது.
தோனியின் சாதனையை முறியடித்த ஜிதேஷ் சர்மா :
அதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மே 29-ஆம் தேதி நடைபெற இருக்கும் முதலாவது குவாலிஃபைர் போட்டியில் விளையாடவும் பெங்களூரு அணி தகுதி பெற்றுள்ளது. அதன்படி நடைபெற்று முடிந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை குவித்தது.
பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜிதேஷ் சர்மா வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். இந்த போட்டியில் 33 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 85 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் அடித்த 85 ரன்கள் மூலம் சென்னை அணியின் கேப்டன் தோனியை பின்னுக்கு தள்ளி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் : ஐபிஎல் போட்டிகளில் ஆறாவது மற்றும் ஆறாவது இடத்திற்கு கீழ இறங்கி ஒரு போட்டியில் அதிக ரன்களை குவித்த வீரராக தோனி முதலிடத்தில் இருந்தார்.
இதையும் படிங்க : விராட் கோலி போயிட்டா என்ன? இவரோட ஆட்டத்தை பாக்க ரசிகர்கள் வருவாங்க – சேவாக் கருத்து
தோனி கடந்து 2018 ஆம் ஆண்டு ஆர்.சி.பி அணிக்கு எதிராக 70 ரன்களை குவித்திருந்தார். அவரது அந்த அதிகபட்ச ரன்களை நேற்று அடித்த 85 ரன்கள் மூலம் ஜிதேஷ் சர்மா முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



