விராட் கோலி போயிட்டா என்ன? இவரோட ஆட்டத்தை பாக்க ரசிகர்கள் வருவாங்க – சேவாக் கருத்து

Sehwag
- Advertisement -

இந்திய அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராத் கோலி ஆகியோர் ஓய்வு பெற்று விட்டதால் அவர்களுக்கு பதிலாக தற்போது சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

டெஸ்ட் போட்டிகளை இவர் சுவாரஸ்யமாக்குவார் : வீரேந்திர சேவாக்

இதன் காரணமாக இந்த இங்கிலாந்து பயணத்தில் நிச்சயம் அனுபவம் மற்ற இந்திய அணி மிகப்பெரிய சவால்களை சந்திக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். அது மட்டும் இன்றி நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இந்திய அணி அங்கு செல்வதால் இந்த டெஸ்ட் தொடரானது சுவாரஸ்யமற்ற ஒன்றாக அமையும் என்றும் இந்த தொடர் விறுவிறுப்பு இல்லாமல் செல்லவும் வாய்ப்பு இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்டின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் நேரில் வருவார்கள் என முன்னாள் இந்திய வீரரான வீரரான வீரேந்திர சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வாறு செயல்பட்டு வருகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். மற்ற பிளேயர்களை விட வித்தியாசமான முறையில் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகி வருகிறார். அவரது ஆட்டம் இந்திய அணிக்கு வலு சேர்ப்பதோடு மட்டுமின்றி சுவாரசியத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

எனவே விராட் கோலி எவ்வாறு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தாரோ அதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இனிவரும் காலங்களில் ரிஷப் பண்ட் ரசிகர்களை கவர்ந்து இழுப்பார். அவரிடம் இருக்கும் நேர்த்தியான அதிரடி ஆட்டம் நிச்சயம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். தற்போது இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர் மிகச் சிறப்பான ஃபார்மில் இருப்பதினால் எதிர்வரும் இங்கிலாந்து தொடரில் அவர் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் வீரேந்திர சேவாக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025 கோப்பை அந்த புதிய அணியின் பெயரில் தான் எழுதப்படும்.. சுனில் கவாஸ்கர் கணிப்பு

அவர் கூறியது போன்றே ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ரிஷப் பண்ட் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் நிச்சயம் இந்த இங்கிலாந்து தொடரிலும் அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பலாம்.

Advertisement