அதுக்கு காரணம் நான் இல்லை.. தங்கமான பிரேவிஸ் பற்றி சிஎஸ்கே வெளியிட்ட அறிக்கை.. பற்றி அஸ்வின் பதில்

R Ashwin 2
- Advertisement -

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக வாங்கப்பட்டார். அங்கே சிறப்பாக விளையாட தவறியதால் கழற்றி விடப்பட்ட அவரை 2025 ஐபிஎல் தொடரில் யாரும் வாங்கவில்லை. அந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணி காயமடைந்த குர்ஜப்நீத்துக்கு பதிலாக ப்ரேவிஸை மாற்று வீரராக வாங்கியது. அந்த வாய்ப்பில் அபாரமாக விளையாடிய அவர் தன்னை சென்னையின் நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தினார்.

அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் அவர் 125* (56) ரன்கள் விளாசி தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற வைத்தார். அப்போது சிஎஸ்கே அணி ப்ரேவிஸை எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து வாங்கியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார். குறிப்பாக ப்ரேவிஸ் தனது தகுதியறிந்து கேட்ட எக்ஸ்ட்ரா பணத்தை மற்ற அணிகள் கொடுக்கத் தயாராக இல்லை என்று அஸ்மின் கூறினார்.

- Advertisement -

ப்ரேவிஸ் தங்கம்:

ஆனால் சிஎஸ்கே வெளியுலகிற்கு தெரியாமல் ப்ரேவிஸ் கேட்ட எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து வாங்கியதாகவும் அஸ்வின் தெரிவித்தார். அது பேசுபொருளாக மாறியதை தொடர்ந்து ப்ரேவிஸை விதிமுறைகளுக்கு உட்பட்டே வாங்கியதாக நேற்று சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது. அதைப் பார்த்த சென்னை ரசிகர்கள் சிஎஸ்கே அணியில் விளையாடும் அஸ்வின் அந்த அணிக்கே பங்கம் விளைவிக்கும் வகையில் பேசலாமா? என்று கோபத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் சிஎஸ்கே அறிக்கை வெளியிடும் அளவுக்கு தாம் தவறாக எதுவும் சொல்லவில்லை என்று அஸ்வின் தெளிவுபடுத்தியுள்ளார். தம்மை போல் பலரும் சந்தேகப்பட்டதாலேயே சிஎஸ்கே நிர்வாகம் அறிவிக்கை வெளியிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மற்ற படி தங்கமான ப்ரேவிஸை சிஎஸ்கே வாங்கியது மாஸ்டர்ஸ்ட்ரோக் என்று பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

அஸ்வின் விளக்கம்:

“நான் சமூக வலைதளங்களில் பேசுவதை விட கிரிக்கெட்டில் அதிகம் கவனம் செலுத்துகிறேன் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். யூடியூப் பக்கத்தில் எங்களுடைய கருத்துக்களை சொல்வதற்காக வீடியோ போடுகிறோம். எங்கள் வீடியோவை பார்க்காத மக்கள் தங்களுக்கு சாதகமாக தலைப்புகளை வைத்து எழுதுகிறார்கள். இன்றைய உலகில் செய்திகள் தலைப்பை வைத்து எழுதப்படுகின்றன”

“ப்ரேவிஸ் உச்சத்தில் பேட்டிங் செய்த விதத்திற்கு சிஎஸ்கே அவரை வாங்கியது தங்கமான முடிவாகும். சிறப்பாக பேட்டிங் செய்யும் அவர் பவர் ஸ்ட்ரைக்கர், பெரிய சிக்சர்கள் அடிக்கக்கூடியவர். இன்றைய காலத்தில் சரியான விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. நிறைய மக்கள் சந்தேகித்ததாலேயே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மை என்னவெனில் அணி, வீரர், ஐபிஎல் நிர்வாகம் யாரும் தவறு செய்யவில்லை”

இதையும் படிங்க: ஒவ்வொரு ஊர்லயும் காதலியா? தோனியின் கிண்டல்.. ஹைடன் விக்கெட்டை 3 முறை கொண்டாடியது பற்றி ஸ்ரீசாந்த்

“ஒரு வீரரை அணி வாங்க விரும்பினால் முதலில் அவருடைய ஏஜெண்டிடம் பேசுவார்கள். பின்னர் அந்த விவரங்களை அவர்கள் பிசிசிஐயிடம் சொல்வார்கள். அதில் ஏதேனும் தவறு இருந்தால் அந்த வீரரால் விளையாட முடியாது. என்னுடைய பழைய வீடியோவில் ப்ரேவிஸ் பேட்டிங் பற்றி பேச விரும்பினேன். அவருடைய ஐபிஎல் பணம் குறித்து கிடையாது. அவரை வாங்க முடிவ யார் எடுத்திருந்தாலும் அது மாஸ்டர்ஸ்ட்ரோக் ஆகும்” என்று கூறினார்.

Advertisement