- Advertisement -
ஐ.பி.எல்

அந்த 3 பேரை பாக்கலையா? சிஎஸ்கே பிரச்சனையே பவுலிங் தான்.. கவலைப்படும் ரசிகருக்கு அஸ்வின் பதில்

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி கம்பேக் கொடுப்பதற்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றது. ஏனெனில் கடந்த வருடம் மோசமாக விளையாடிய அந்த அணி வரலாற்றில் முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து வெளியேறியது. அதற்கு காரணமான சீனியர்களை கழற்றி விட்ட சிஎஸ்கே அணி தற்போது இளம் வீரர்களை நோக்கி நகர்ந்துள்ளது.

அதன் பயனாக கடந்த வருடமே ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல், தேவால்ட் ப்ரேவிஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரங்களாக தங்களை அடையாளப்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தானுக்கு கொடுத்த சிஎஸ்கே டிரேடிங் முறையில் சஞ்சு சாம்சனை வாங்கியது. அதனால் விரைவில் விடை பெற உள்ள தோனிக்கு பதிலாக சிஎஸ்கே நல்ல விக்கெட் கீப்பரை வாங்கியுள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

சிஎஸ்கே ரசிகர் கவலை:

அது போக ஆஸ்திரேலியாவின் மேத்தியூ ஷார்ட்டை வாங்கிய சிஎஸ்கே பேட்டிங் துறையை பலப்படுத்தியது. லோயர் ஆர்டரில் அதிரடியாக விளையாடக்கூடிய இளம் வீரர் கார்த்திக் சர்மா, ஸ்பின் பவுலிங் ஆல் ரவுண்டர் பிரசாந்த் வீர் ஆகியோரையும் சென்னை 28.40 கோடிக்கு வாங்கியது. நியூசிலாந்தின் மாட் ஹென்றி, ஜாக் போல்க்ஸ் ஆகியோரையும் வாங்கிய சிஎஸ்கே வேகப்பந்து வீச்சு துறையை பலப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஸ்பின் பவுலிங் துறையில் நூர் அகமது இருக்கும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகில் ஹொசைன் வாங்கப்பட்டுள்ளார். அதனால் 2026 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் தலைமையில் கோப்பையை வெல்வதற்கு தேவையான வீரர்களை சிஎஸ்கே வாங்கியுள்ளது என்றே சொல்லலாம். இருப்பினும் ஒரு ரசிகர் சிஎஸ்கே அணியின் “பிரச்சனையே பேட்டிங்கில் இல்ல, பவுலிங்கில் தான்” என்று கவலையுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அஸ்வின் பதில்:

அதைப் பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வின். “நீங்கள் நாதன் எலிஸ் மற்றும் அகில் ஹொசைன் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கவில்லையா? அவர்கள் அடங்கிய பவுலிங் கூட்டணியில் நூர் அஹ்மதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று அந்த ரசிகருக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறுவது போல நாதன் எலிஸ் 2025/26 பிக்பேஷ் தொடரில் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

இதையும் படிங்க: ஆளே மாறிய சர்பராஸ் கதவை தட்டல உடைக்கிறார்.. 2026இல் சிஎஸ்கே இந்த வாய்ப்பை கொடுக்கனும்.. அஸ்வின்

அதே போல தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2025/26 எஸ்ஏ20 தொடரில் ஜேஎஸ்கே அணிக்காக அகில் ஹொசைன் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். கடந்த ஐபிஎல் தொடரில் நூர் அஹ்மத் மட்டுமே கிட்டத்தட்ட ஊதா தொப்பியை வெல்லும் அளவுக்கு அபாரமாக பந்து வீசி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தார். எனவே அவர்கள் 3 பேர் இருக்கும் போது கவலை வேண்டாம் என்று சிஎஸ்கே ரசிகர்களுக்கு அஸ்வின் தெம்பை ஊட்டுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -