உலகிலேயே அதுல அஸ்வின் தான் பெஸ்ட்.. அவர்கிட்ட கத்துக்கிட்டது பாகிஸ்தானில் சதமடிக்க உதவுச்சு.. பென் டக்கெட்

- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி அக்டோபர் 15ஆம் தேதி முல்தான் நகரில் துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 366 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் பேட்டிங் செய்யும் இங்கிலாந்து 2வது நாள் முடிவில் 239 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பென் டக்கெட் சதம்:

அந்த அணிக்கு ஓலி போப் 29, அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் ஜோ ரூட் 34, ஹரி ப்ரூக் 9 ரன்களில் பாகிஸ்தான் ஸ்பின்னர் சஜித் கான் வலையில் விழுந்தனர். இருப்பினும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் பென் டக்கெட் சதமடித்து 114 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் உலகிலேயே தம்மைப் போன்ற இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சவாலாக பந்து வீசுவதில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறந்தவர் என்று பென் டக்கெட் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் இந்தியாவில் நடைபெற்ற தொடரில் அவருக்கு எதிராக விளையாடியது இப்போட்டியில் தமக்கு உதவியதாக தெரிவிக்கும் பென் டக்கெட் இது பற்றி பேசியது பின்வருமாறு. “2016ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக அறிமுகமான என்னால் 60 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. அது கொஞ்சம் கடினமானது. அந்த காலகட்டங்களில் கொஞ்சம் இளமையாக இருந்த நான் இங்கிலாந்து சூழ்நிலைகளில் நிறைய ரன்கள் குவித்துள்ளேன்”

- Advertisement -

அஸ்வினுக்கு எதிராக:

“ஆனால் இந்திய துணை கண்டங்களில் விளையாடுவது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் இங்குள்ள சுழலுக்கு சாதகமான சூழ்நிலைகளில் நாங்கள் வளர்ந்ததில்லை. அதனால் வங்கதேசத்தில் 60 ரன்கள் அடித்த நான் பின்னர் இந்தியாவுக்கு சென்று அதிகமாக அவுட்டானேன். குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எதிராக தடுமாறினேன்”

இதையும் படிங்க: மழையை சாதகமாக்க ட்ரை பன்றோம்.. முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ரோஹித் 2 மாற்றம்.. இந்திய அணி இதோ

“என்னுடைய கருத்துப்படி அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறந்த பவுலர். அங்கே விளையாடியது கற்றுக் கொள்வதற்கு நல்ல இடமாக அமைந்தது” என்று கூறினார். அவர் கூறுவது போல டெஸ்ட் கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார். அதனால் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வின் எப்போதும் சவாலை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement