தமிழர் பாரம்பரியத்தை கிண்டலடித்த வடக்கு ரோஹித் சர்மா ரசிகருக்கு – அஷ்வின் கொடுத்த மாஸ் பதிலடி, முழுவிவரம்

Rohit-and-Ashwin
- Advertisement -

2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்வதற்கு தயாராகும் வகையில் வங்கதேசத்துக்கு பயணித்துள்ள இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணித்து பங்கேற்ற டி20 தொடரை வென்றாலும் ஒருநாள் தொடரை இழந்தது. அந்த சுற்றுப்பயணம் முழுவதிலும் வீரர்களை விட மழை அபாரமாக விளையாடிய நிலையில் ரவி சாஸ்திரி, ஜாகிர் கான், முரளி கார்த்திக், அஜித் அகர்கர் உள்ளிட்ட நிறைய முன்னாள் இந்திய நட்சத்திர வீரர்கள் வர்ணனையாளர்களாக செயல்பட்டு ரசிகர்களை மகிழ்வித்தார்கள்.

அதே போல் நியூசிலாந்து தரப்பில் ஜாம்பவான் ஸ்டீபன் பிளம்மிங், இயன் ஸ்மித் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் வர்ணையாளர்களாக செயல்பட்டு அசத்தினார்கள். அந்த நிலைமையில் நவம்பர் 30ம் தேதியன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியிலும் மழை தனது வேலையை காட்டிய நிலையில் இரு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பழைய போட்டிகளைப் பற்றிய நினைவுகளை பேசினார்கள். அப்போது நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளம்மிங் தங்கள் நாட்டுக்கு வரும்போதெல்லாம் இந்திய அணியினர் பிளாட்டாக இருக்கும் பிட்ச்களை பற்றி குறை சொல்வதை வழக்கமாக வைத்துள்ளது பற்றி பேசினார்.

- Advertisement -

அகங்கார வடக்கு:
குறிப்பாக 2002இல் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற தொடரை சுட்டிக்காட்டிய அவருக்கு அதே தொடரின் ஒரு போட்டியில் சுழல் பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி சுழலுக்கு கை கொடுக்காத பிட்ச் காரணமாக ஒரு ஓவர் கூட வீசாததை இந்திய வர்ணனையாளர்கள் நினைவு படுத்தினார்கள். அதை தொலைக்காட்சியில் பார்த்த ரவிச்சந்திரன் அஷ்வின் மிகவும் பிடித்து போய் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த முன்னாள் வீரர்கள் நடத்திய காரசார விவாதத்தை பாராட்டி ட்வீட் போட்டிருந்தார்.

அதற்கு வட இந்திய மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ரசிகர் “அண்ணா ஒரு பிளேட் இட்லி சாம்பார்” என்று சம்பந்தமின்றி பதிலளித்தார். அதாவது தமிழகத்தின் புகழ்பெற்ற உணவான இட்லி சாம்பாரை வைத்து ரோகித் சர்மாவின் புகைப்படத்தை புரொபைல் பிக்சராக வைத்திருந்த அந்த ரசிகர் அஷ்வினை கிண்டலடித்தார். பொதுவாகவே களத்திலும் களத்திற்கு வெளியேயும் இது போன்ற கருத்துக்களுக்கு அற்புதமான பதிலடி கொடுப்பவராக கருதப்படும் அஷ்வின் “வட? (வடை)” என ஒற்றை வார்த்தையை பயன்படுத்தி 2 அர்த்தங்களில் மாஸ் பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

ஒன்று இட்லி, சாம்பார் ஆகிய உணவுகளுடன் வடையும் மிகவும் பிரபலம் என்பதால் அதை ஏன் விட்டு விட்டீர்கள்? அதையும் சேர்த்து வயிறு எறியும் அளவுக்கு எங்களை கலாய்க்கவில்லையா? என்ற வகையில் நேராக பதிலடி கொடுத்தார். மற்றொன்று வடமாநிலங்களில் குறிப்பாக மும்பையில் மிகவும் பிரபலமாக இருக்கும் “வடபாவ்” எனப்படும் உணவு சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா போன்ற நட்சத்திரங்கள் விரும்பும் உணவாகவும் உள்ளது.

அந்த நிலையில் சமீப காலங்களில் அதிக உடல் எடையுடன் சுமாரான ஃபிட்னஸ் காரணமாக ரோகித் சர்மா களத்தில் சுமாராக செயல்படுவதால் அவரை நிறைய ரசிகர்கள் “வடபாவ்” என்று சமூக வலைதளங்களில் கிண்டலடிப்பது வழக்கமாகும். அதனாலேயே ரோகித் சர்மாவின் புகைப்படத்தை வைத்திருந்த அந்த ரசிகருக்கு “வட” என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தி அஷ்வின் மறைமுகமாக அப்படி பதிலடி கொடுத்ததாக இதர ரசிகர்கள் சேர்ந்து அந்த குறிப்பிட்ட ரசிகரை கலாய்த்தார்கள். அதனால் ரோகித் சர்மா புகைப்படத்தை மாற்றிய அந்த ரசிகர் தற்போது மற்றொரு முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா மொட்டை அடித்தது போன்ற புகைப்படத்தை வைத்துள்ளார்.

அதை விட அந்த ரசிகரே அதை ஒப்புக்கொண்டுள்ளார். முன்னதாக நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் பகுதி நேர பேட்ஸ்மேனாக அசத்திய ரவிச்சந்திரன் அஷ்வின் முதன்மை வேலையான பந்து வீச்சில் சொதப்பியதால் டி20 அணியிலிருந்து கழட்டி விடப்பட்டார். ஏற்கனவே 36 வயதை கடந்து விட்ட அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இனிமேல் அவரை டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement