கிளவுஸை தூக்கி எறிந்து அம்பயர் மீது கோபத்தை கக்கிய அஸ்வின்.. தண்டனையை அறிவித்த டிஎன்எல்பில் நிர்வாகம்

R ashwin
- Advertisement -

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் நடைபெற்று வருகிறது. அதில் ஜூன் 8ஆம் தேதி கோயம்புத்தூரில் 5வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் திருப்பூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய திண்டுக்கல் அணியை 93 ரன்களுக்கு சுருட்டிய திருப்பூர் எளிதாக வெற்றி பெற்றது.

அப்போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய சிவம் சிங் ஒய்ட் போல வந்த ஒரு பந்தை அடிக்காமல் தவற விட்டார். அதை எதிர்ப்புறமிருந்த மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒய்ட் ரிவியூ எடுக்குமாறு சொன்னார். அதன் காரணமாக சிவம் சிங் ரிவ்யூ கேட்டதைத் தொடர்ந்து மூன்றாவது நடுவர் சோதித்தார்.

- Advertisement -

கோபத்தை கக்கிய அஸ்வின்:

அப்போது பந்து லைனுக்குள் இருந்ததால் 3வது நடுவரும் ஒயிட் கொடுக்கவில்லை. அதற்கடுத்த பந்தை எதிர்கொண்ட சிவம் சிங் கொஞ்சம் வலது பக்கமாக சென்று பந்தை அடிக்காமல் தவறி விட்டார். அதையும் ரிவ்யூ எடுக்குமாறு அஸ்வின் சொன்னார். அதைச் சோதித்த மூன்றாவது நடுவர் மீண்டும் ஒய்ட் வழங்கவில்லை.

அதற்கடுத்த ஓவரில் ஒய்ட் போல வந்த பந்தை அஸ்வின் முட்டி போட்டு ஸ்வீப் அடிக்க முயற்சித்து தவற விட்டார். அது அவருடைய காலில் பட்டதைத் தொடர்ந்து திருப்பூர் கேப்டன் சாய் கிஷோர் எல்பிடபிள்யூ முறையில் கேட்ட அவுட்டை நடுவர் கொடுத்து விட்டார். மறுபுறம் ஏற்கனவே 2 முறை தவறாக ரிவ்யூ எடுத்ததன் காரணமாக அஸ்வின் அந்த தீர்ப்பை எதிர்த்து மறுபரிசலனை செய்ய முடியவில்லை.

- Advertisement -

தண்டனை அறிவிப்பு:

அதன் காரணமாக விக்கெட்டை கொடுத்த பெண் அம்பயர் கிருத்திகாவுடன் அவர் வாக்குவாதம் செய்தார். ஆனால் அந்த அம்பயர் பெரியளவில் எந்த பதிலும் சொல்லாததால் கோபமடைந்த அஸ்வின் ஏமாற்றத்துடன் பெவிலியின் நோக்கி சென்றார். அதன் உச்சமாக பௌண்டரி எல்லைக்கு முன்பாக தம்முடைய ஒரு கையுறையை (க்ளவுஸ்) வெறித்தனமாக தூக்கி எறிந்த அஸ்வின் கோபத்தை கக்கி விட்டு சென்றார்.

இதையும் படிங்க: பிக்பாக்கெட்டை விட வேகமாக இதை செஞ்சு இந்தியாவுக்காக உ.கோ ஜெய்ச்ச தோனி.. ஒரே மாதிரி இருப்பாரு.. ரவி சாஸ்திரி

இந்நிலையில் அந்தப் போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அதிருப்தியை தெரிவித்த அஸ்வினுக்கு 10% சம்பளம் அபராதம் விதிக்கப்படுவதாக டிஎன்பிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் விளையாட்டு உபகரணத்தை தவறாக பயன்படுத்தியதற்காக அவருக்கு எக்ஸ்ட்ரா 20% சம்பளம் அபராதமாக விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை அஸ்வின் ஏற்றுக்கொண்டதால் மேற்கொண்டு நடவடிக்கை நடத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement