- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உலகின் 7வது பவுலர்.. நேதன் லையனை முந்திய அஸ்வின்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் உலக சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் 36 வருடங்கள் கழித்து நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் தோற்ற இந்திய ஆரம்பத்திலேயே பின்தங்கியது. அந்த நிலையில் இத்தொடரின் இரண்டாவது போட்டி அக்டோபர் 24ஆம் தேதி புனே நகரில் துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு கேப்டன் டாம் லாதமை 15 ரன்களில் காலி செய்த ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்ததாக வந்த வில் எங்கையும் 18 ரன்களில் பெவிலியன் அனுப்பினார். இருப்பினும் மறுபுறம் துவக்க வீரர் டேவோன் கான்வே நங்கூரமாக விளையாடி இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார்.

- Advertisement -

போராடும் அஸ்வின்:

அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்தரா தம்முடைய பங்கிற்கு இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். அந்த வகையில் மூன்றாவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் கான்வே 76 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். அதனால் ரவீந்திரா – மிட்சேல் ஆகியோர் சேர்ந்து அடுத்ததாக நிதானமாக விளையாடி வருகிறார்கள்.

மறுபுறம் இந்திய அணி இன்னும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்து நியூசிலாந்தை சுருட்ட போராடி வருகிறது. முன்னதாக இந்தப் போட்டியில் இதுவரை 3 விக்கெட்டுகளை எடுத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் சில அபாரமான சாதனைகளை படைத்துள்ளார். அந்த விபரங்களை பற்றி பார்ப்போம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை கடந்த 2019ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் நாயகன்:

அந்தத் தொடரில் இதுவரை ரவிச்சந்திரன் அஸ்வின் 39 போட்டிகளில் 189* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் சாதனையை உடைத்துள்ள அஸ்வின் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரவிச்சந்திரன் அஸ்வின்: 189*
2. நேதன் லயன்: 187
3. பட் கமின்ஸ்: 175
4. மிட்சேல் ஸ்டார்க்: 147
5. ஸ்டுவர்ட் ப்ராட்: 134

இதையும் படிங்க: இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிடின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – ரோஹித் சர்மா

இது போக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் நேதன் லயனை முந்தியுள்ள அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7வது அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. முத்தையா முரளிதரன்: 800
2. ஷேன் வார்னே: 708
3. ஜேம்ஸ் ஆண்டரசன்: 704
4. அனில் கும்ப்ளே: 619
5. ஸ்டுவர்ட் ப்ராட்: 604
6. கிளன் மெக்ராத்: 563
7. ரவிச்சந்திரன் அஸ்வின்: 531*
8. நேதன் லயன்: 530

- Advertisement -