ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது.
ராகுல் டிராவிடை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24-ஆம் தேதியான இன்று புனே நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சதம் அடிக்கும் பட்சத்தில் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிடின் மிகப்பெரிய சாதனையை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதுகுறித்த தகவல் வெளியேற்றி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இதுவரை இந்திய அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முன்னாள் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களுடன் முதலிடத்திலும், நட்சத்திர இந்திய வீரரான விராட் கோலி 80 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
அவர்கள் இருவருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ரோகித் சர்மாவும், ராகுல் டிராவிடும் தலா 48 சதங்களுடன் சமநிலை வகிக்கின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா மேலும் ஒரு சதம் அடிக்கும் மூலம் பட்சத்தில் 49 சதங்களுடன் டிராவிடை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தினை பிடிப்பார்.
அதேபோன்று இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் முன்னாள் வீரர்களான சேவாக் மற்றும் கங்குலி ஆகியோர் தலா 38 சதங்களுடன் சமநிலை வகிக்கின்றனர். மேலும் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இன்னும் ஏழு போட்டிகள் எஞ்சியுள்ள வேளையில் மேலும் ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்களை அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்டில் கே.எல் ராகுலை நீக்கி சர்பராஸ் கானுக்கு இடம் குடுக்க என்ன காரணம்? – விவரம் இதோ
சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் போட்டிகளை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 சதங்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 31 சதங்களையும், டி20 கிரிக்கெட்டில் ஐந்து சதங்களையும் அடித்துள்ள ரோகித் சர்மா கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக தர்மசாலாவில் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



