இரண்டாவது டெஸ்டில் கே.எல் ராகுலை நீக்கி சர்பராஸ் கானுக்கு இடம் குடுக்க என்ன காரணம்? – விவரம் இதோ

Sarfaraz-and-KL
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது அக்டோபர் 24-ஆம் தேதி இன்று புனே நகரில் துவங்கியது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த இரண்டாவது போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

கே.எல் ராகுலை தாண்டி இடம்பிடித்த சர்பராஸ் கான் :

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக சர்பராஸ் தான் ஆறாவது இடத்தில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இப்படி அனுபவ வீரரான கே.எல் ராகுலை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் அணியில் இடம் பெற்றிருப்பது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில் அதற்கான விளக்கமும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் முதல் டெஸ்ட் போட்டியின் போது கழுத்து வலி காரணமாக விளையாடாமல் இருந்த நட்சத்திர வீரர் சுப்மன் கில் உள்ளே வந்ததால் கே.எல் ராகுல் அல்லது சர்பராஸ் கான் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அந்த வகையில் தான் தற்போது கே.எல் ராகுல் வெளியேற்றப்பட்டு அவரது இடத்தில் சர்பராஸ் கான் விளையாடுகிறார். இதற்கு முக்கிய காரணம் யாதெனில் : நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் முதல் இன்னிங்சில் ரன்கள் எதுவும் எடுக்காமலும் இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்களை மட்டுமே கே.எல் ராகுல் குவித்திருந்தார்.

- Advertisement -

அதே வேளையில் சர்பராஸ் கான் முதல் இன்னிங்சில் டக் அவுட்டாகி இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸ்சில் 150 ரன்கள் அடித்து தனது பார்மை நிரூபித்திருந்தார். என்னதான் கே.எல் ராகுல் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் கடந்த சில தொடர்களாகவே அவரது ஆட்டம் நிலைத்தன்மை இல்லாமல் இருந்து வந்தது. அதே வேளையில் சர்பராஸ் தான் தற்போது தான் இந்திய அணிக்காக அறிமுகமாகியிருந்தாலும் முதல் நான்கு போட்டிகளில் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதம் என அசத்தலான பார்மை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலியை முந்திய ரிஷப் பண்ட்.. வெளியான புதிய தரவரிசை பட்டியல் – எத்தனையாவது இடம்?

இதன்காரணமாகவே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்திருந்த இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் : ராகுல் சிறப்பான வீரம் என்றும் அவரை இந்திய அணி தக்க வைக்கும் என்று அறிவித்திருந்த வேளையில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement