சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்ற முடியும் தொடர்களுக்கு இடையே மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கும் வீரர்களின் தரவரிசை பட்டியலில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மற்றும் பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு இரண்யேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த கையோடு புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
விராட் கோலியை முந்திய ரிஷப் பண்ட் :
அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் மூன்று இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இங்க பட்டியலில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் முதல் இடத்தில் நீடிக்கிறார்.
இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 20 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 99 ரன்கள் குவித்து முதல் முறையாக மூன்று இடங்கள் முன்னேறி விராட் கோலியை தாண்டி ஆறாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
விராட் கோலி ஒரு இடம் சரிந்து தற்போது இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தொடர்ச்சியாக முதலிடத்தில் நீடிக்கிறார்.
அதேபோன்று ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஜடேஜா முதலிடத்தில் நீடிக்கிறார். இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று புனே நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தற்போது விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 2வது டெஸ்டில்.. சிராஜ், ராகுலை நீக்கிய ரோஹித் சர்மா.. தமிழக வீரர் சுந்தருடன் இந்திய பிளேயிங் லெவன்
ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணியானது இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.



