இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸை பாக்கெட்டில் வைத்திருக்கும் அஸ்வின்.. கபில் தேவை முந்தி புதிய 2 வரலாற்று சாதனை

Ashwin vs Stokes
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. குறிப்பாக பஸ்பால் முறையை பின்பற்றி இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று எச்சரித்த இங்கிலாந்து முதல் போட்டியிலேயே வென்றது. ஆனால் அதன் பின் கொதித்தெழுந்த இந்தியா அடுத்தடுத்த 4 போட்டிகளை வென்று கோப்பையை முத்தமிட்டுள்ளது.

முன்னதாக மார்ச் 7ஆம் தேதி தரம்சாலாவில் துவங்கிய கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுத்த உதவியுடன் 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 4, குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 477 ரன்கள் குவித்து வெற்றியை ஆரம்பத்திலேயே உறுதி செய்தது.

- Advertisement -

அஸ்வின் பாக்கெட்டில் ஸ்டோக்ஸ்:
அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 103, கில் 110 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதன் பின் 229 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து மோசமாக விளையாடி 195 ரன்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 84 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அந்த வகையில் தரம்சாலாவில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். குறிப்பாக 2வது இன்னிங்சில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை க்ளீன் போல்ட்டாக்கிய அஸ்வின் தன்னுடைய கேரியரில் 13வது முறையாக அவுட்டாக்கினார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேனை அதிக முறை அவுட்டாக்கிய இந்திய பவுலர் என்ற கபில் தேவ் சாதனையை உடைத்த அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் பாகிஸ்தானின் முதாசர் நாசரை கபில் தேவ் 12 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுட்டாக்கியதே முந்தைய சாதனையாகும். அதே பட்டியலில் மீண்டும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை 11 முறை அவுட்டாக்கிய அஸ்வினும் இங்கிலாந்தின் அலெஸ்டர் குக்கை 11 முறை அவுட்டாக்கிய இஷாந்த் சர்மாவும் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற 40 கோடியை கொடுத்த பிசிசிஐ.. உலகிற்கே முன்னோடியாக ஜெய் ஷா அறிவிப்பு

அது போக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து பென் ஸ்டோக்ஸ் இதுவரை 17 முறை அஸ்வின் அவுட்டாக்கியுள்ளார். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேனை அதிக முறை அவுட்டாக்கிய இந்திய பவுலர் என்ற கபில் தேவின் மற்றொரு சாதனை உடைத்துள்ள அஸ்வின் புதிய வரலாறு படைத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் தேஷ்மண்ட் ஹெய்ன்ஸை இந்திய ஜாம்பவான் கபில் தேவ் 16 முறை அவுட்டாக்கியதே முந்தைய அதிகபட்ச சாதனையாகும்.

Advertisement