டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற 40 கோடியை கொடுத்த பிசிசிஐ.. உலகிற்கே முன்னோடியாக ஜெய் ஷா அறிவிப்பு

Jay Shah Ashwin
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நிறைவு பெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்த தொடரில் 2வது போட்டியில் காயமடைந்து வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயரை குணமடைந்ததும் ரஞ்சிக் கோபையில் விளையாடுமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டது. அதற்கு முன்பாகவே கேஎஸ் பரத்துக்கு பதிலாக உங்களை தேர்வு செய்ய ரஞ்சிக் கோப்பையில் விளையாடுங்கள் என்று இஷான் கிசானிடம் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படையாக கேட்டுக் கொண்டார்.

ஆனால் அதை அந்த 2 வீரர்களும் செய்யத் தவறினர். அதனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2023 – 24 காலண்டர் வருடத்திற்கான இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து அந்த 2 வீரர்களும் நீக்கப்பட்டனர். அத்துடன் இனிமேல் ஃபிட்டாக இருக்கும் வீரர்கள் அனைவரும் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ கண்டிப்புடன் அறிவித்துள்ளது.

- Advertisement -

பிசிசிஐ அறிவிப்பு:
முன்னதாக ஐபிஎல் விளையாடுவதற்கு கிடைக்கும் சம்பளம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு கொடுக்கப்படுவதில்லை. அதனாலேயே இஷான், ஸ்ரேயாஸ் போன்ற நிறைய வீரர்கள் தற்போது டெஸ்ட் தொடருக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. இந்நிலையில் 2022 – 23 காலண்டர் வருடத்தில் இருந்து இந்தியாவில் “டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத்தொகை திட்டம்” அமலுக்கு வருவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் படி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் சம்பளத்தை தாண்டி 40 கோடிகளை பிசிசிஐ ஊக்கத்தொகையாக வழங்க உள்ளது. இந்த திட்டத்தில் 75% மேல், 50% மேல், 50% கீழ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு 3 பிரிவாக ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. எடுத்துக்காட்டாக 2024 காலண்டர் வருடத்தில் இந்தியா 9 போட்டிகளில் விளையாடுகிறது என்றால் அதில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடும் வீரருக்கு ஊக்கத்தொகையாக போட்டி ஒன்றுக்கு 45 லட்சம் கொடுக்கப்படும்.

- Advertisement -

அதே போட்டிகளில் தேர்வாகி பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கு போட்டிக்கு 22.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். 2வது எடுத்துக்காட்டாக 2024 வருடத்தில் 9 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது என்றால் அதில் 5, 6 போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு போட்டி ஒன்றுக்கு 30 லட்சம் பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கு 15 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: என்னோட பேட்டிங் முன்னேற்றதுக்கு அவர் தான் காரணம்.. இங்கிலாந்தை வீழ்த்திய ஆட்டநாயகன் குல்தீப் பேட்டி

மேலும் 3வது எடுத்துக்காட்டாக 2024 வருடத்தில் இந்தியா 9 போட்டிகளில் விளையாடுகிறது என்றால் அதில் 4க்கும் குறைவான போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு 15% போட்டியின் சம்பளம் ஊக்கத் தொகையும் கிடையாது. மொத்தத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு அணிகள் ஐபிஎல் தொடரால் டெஸ்ட் போட்டிகள் அழிவதாக விமர்சித்து வருகின்றன. ஆனால் அப்படி வாய் பேசும் உலக அணிகளுக்கு முன்னோடியாக தற்போது செயலில் இறங்கியுள்ள பிசிசிஐ டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement