என்னோட பேட்டிங் முன்னேற்றதுக்கு அவர் தான் காரணம்.. இங்கிலாந்தை வீழ்த்திய ஆட்டநாயகன் குல்தீப் பேட்டி

Kuldeep Yadav 5
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தரம்சாலாவில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அதனால் பஸ்பால் அணுகுமுறையை பின்பற்றி தோற்கடிப்போம் என்று எச்சரித்த இங்கிலாந்தை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பி வைத்த இந்தியா 4 – 1 (5) என்ற கணக்கில் கோப்பையை வென்று சொந்த மண்ணில் 12 வருடங்களாக ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் சாதனையை தக்க வைத்துக் கொண்டது.

மார்ச் 7ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுத்த போதிலும் மற்ற வீரர்கள் கை கொடுத்த தவறியதால் 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா 477 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது.

- Advertisement -

ஆட்டநாயகன் குல்தீப்:
இந்திய அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 103, கில் 110 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பசீர் 5 விக்கெட்டுகள் சாய்ந்தார். பின்னர் 229 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து முன்பை விட மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 195 ரன்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜோ ரூட் 84 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக தனது 100வது போட்டியில் அசத்திய அஸ்வின் 5 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வெற்றிக்கு மொத்தம் 7 விக்கெட்டுகள், 30 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக இந்த தொடரில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை விட அதிக பந்துகளை எதிர்கொண்ட குல்தீப் யாதவ் அற்புதமாக பேட்டிங் செய்து வெற்றியில் பங்காற்றியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

- Advertisement -

இந்நிலையில் பேட்டிங்கில் தாம் முன்னேறுவதற்கு பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் உதவியதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் நீங்கள் சொல்வது போல இது எனது கேரியரில் நான் சிறப்பாக பந்து வீசிய தொடராகும். இதற்காக கடந்த சில கடினமாக உழைத்த எனக்கு தற்போது பரிசு கிடைக்கிறது. ராஞ்சியில் பிட்ச் மெதுவாக இருந்ததை பயன்படுத்தி நான் சிறப்பாக பந்து வீசியது சிறப்பானது. ஸ்டோக்ஸ் மற்றும் கிராவ்லி ஆகியோரின் விக்கெட்டுகள் எனக்கு மிகவும் பிடித்தது. அது அழகான பந்து”

இதையும் படிங்க: இங்கிலாந்து அணியை (4-1) என்ற கணக்கில் நாங்கள் துரத்தி அடிக்க இவர்களே காரணம் – ரோஹித் சர்மா பூரிப்பு

“நான் நல்ல லென்த்தை பின்பற்றுவதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறேன். பேட்ஸ்மேன் என்ன செய்வார் என்பதை பற்றி அதிகமாக சிந்திக்காமல் செயல்படுவது ஸ்பின்னர்களுக்கு முக்கியமான வேலையாகும். என்னுடைய ரிதம் எனக்கு மிகவும் பிடித்தது. நான் இத்தொடரில் நன்றாக பேட்டிங் செய்ததற்கான பாராட்டுக்கள் பயிற்சியாளருக்கு செல்ல வேண்டும். திறமை மட்டுமின்றி மனதளவிலும் திடமாக நிற்க எனக்கு நிறைய உதவிய அவர் வலைப்பயிற்சியில் எப்போதும் ஆதரவு கொடுத்தார்” என்று கூறினார்.

Advertisement