- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவர வெச்சு 20 – 30 ரன்ஸ் எடுக்குறதுக்கு.. குல்தீப்பை எடுத்தா இங்கிலாந்தை அட்டாக் பண்ணலாமே.. அஸ்வின் விமர்சனம்

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரில் மான்செஸ்டர் நகரில் நடைபெறும் 4வது போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 358 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ரிசப் பண்ட் 54, ஜெய்ஸ்வால் 58 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து பஸ்பால் ஆட்டத்தை கையில் எடுத்து இந்தியாவை அடித்து நொறுக்கி 2வது நாளிலேயே 225/2 ரன்களை குவித்து அசத்தியது. குறிப்பாக ஜாக் கிராவ்லி 84, பென் டக்கெட் 94 ரன்களை அடித்து இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவைக் கொடுத்தார்கள். மறுபுறம் கடந்த 3 போட்டிகளில் நன்றாக பவுலிங் செய்த இந்தியா இப்போட்டியில் மீண்டும் சுமாராக பந்து வீசியது.

- Advertisement -

அட்டாக்கிங் குல்தீப் மிஸ்:

இந்நிலையில் பேட்டிங் வரிசையை ஆழப்படுத்துவதற்காக இந்திய அணி குல்தீப் யாதவை 4வது போட்டியிலும் கழற்றி விட்டது சரியான முடிவல்ல என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இப்போதெல்லாம் டெயில் எண்டர் பேட்ஸ்மேன்கள் எடுக்கும் 20 – 30 ரன்கள் வெற்றிக்கு உதவுவதில்லை என்றும் அஸ்வின் கூறியுள்ளார். அப்படியிருந்தும் குல்தீப்புக்கு பதிலாக இந்திய அணி தாக்கூரை தேர்ந்தெடுத்ததை விமர்சிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“இந்தத் தொடரின் முதல் 4 போட்டிகளில் குல்தீப் விளையாடவில்லை என்று யாராவது என்னிடம் சொன்னால் நான் மிகவும் ஆச்சரியப்படுவேன். துரதிஷ்டவசமாக அந்த எக்ஸ்ட்ரா 20 – 30 ரன்களை எடுப்பதற்காக நாம் நம்முடைய பேட்டிங் மீது அதிக ஈடுபாட்டை கொண்டுள்ளோம். இங்கிலாந்தில் அந்த 20 – 30 ரன்கள் அடிப்பதால் ஏற்படும் சாதகங்கள் முடிந்து போன ஒன்றாகும்”

- Advertisement -

அஸ்வின் விமர்சனம்:

“முன்பெல்லாம் அங்கே உங்களின் 7, 8வது இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் தலா 30 ரன்கள் அடித்தால் அது பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் பிட்ச்சில் பவுலர்களுக்கு நல்ல உதவி கிடைக்கும். மேலும் தாக்கூர் 20 – 30 ரன்களை அடிப்பார் என்று எதிர்பார்க்கும் நீங்கள் பந்து வீச்சில் அவரிடம் குறைந்த ஓவர்களையே கொடுக்கிறீர்கள்”

இதையும் படிங்க: கால் உடைஞ்ச பிறகும் ரிஷப் பண்ட் என்கிட்ட இதைத்தான் சொன்னாரு.. ரவி சாஸ்திரி பகிர்ந்த – சுவாரசிய தகவல்

“தாக்கூரை நானும் விரும்புகிறேன். ஆனால் அவரை இவ்வளவு குறைவாகப் பயன்படுத்தும் நீங்கள் ஏன் குல்தீப்பை பயன்படுத்தக்கூடாது? என்பது என்னுடைய மனதை ஊதித் தள்ளுகிறது. நீங்கள் 3 ஸ்பின்னர்களுடன் விளையாட முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் தற்போது ஜடேஜா ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார். சுந்தர் கணிசமான ரன்கள் அடிக்கிறார். உங்களுடைய பவுலர்கள் பேட்டிங் செய்யும் போது ஏன் உங்களால் அட்டாக்கிங் பவுலரை எடுத்து வர முடியாது என்று முடியாது” எனக் கூறினார்.

- Advertisement -