- Advertisement -
உலக கிரிக்கெட்

என்கிட்டயும் 13 முறை அவுட்டாகியுள்ள பென் ஸ்டோக்ஸ்.. லயனை சமாளிக்க இதை செய்யனும்.. அஸ்வின் அட்வைஸ்

ஆஷஸ் 2025/26 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் இங்கிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியா ஹாட்ரிக் வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் 3 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா கோப்பையை வென்றுள்ளது. மறுபுறம் 2010/11க்குப்பின் தொடர்ந்து 15வது வருடமாக ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் கோப்பையை வெல்ல முடியாமல் இங்கிலாந்து தோற்றுள்ளது.

சொல்லப்போனால் கடந்த 15 வருடங்களாக ஆஸ்திரேலியாவில் வெறும் ஒரு டெஸ்ட் போட்டியை கூட வெல்ல முடியாமல் இங்கிலாந்து திண்டாடி வருகிறது. முன்னதாக அத்தொடரில் ஜோ ரூட் உட்பட இங்கிலாந்தின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் பெரிய ரன்கள் குவிக்கத் தடுமாறி வருகிறார்கள். இருப்பினும் மிடில் ஆர்டரில் கேப்டன் ஸ்டோக்ஸ் முடிந்தளவு நங்கூரமாக விளையாடி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறார்.

- Advertisement -

லயனிடம் சிக்கிய ஸ்டோக்ஸ்:

அந்த வகையில் 3வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 83 ரன்கள் எடுத்த அவர் 2வது இன்னிங்ஸில் மீண்டும் போராடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது ஸ்டோக்ஸ் 5 ரன்னில் நேதன் லயன் சுழலில் க்ளீன் போல்ட்டானார். அதையும் சேர்த்து லயனுக்கு எதிராக ஸ்டோக்ஸ் 10வது முறையாக அவுட்டாகியுள்ளார்.

உலகிலேயே பென் ஸ்டோக்ஸை (13) அதிக முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுட்டாக்கிய பவுலராக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் லயன் மற்றும் தம்மைப் போன்ற ஆஃப் ஸ்பின் பவுலர்களை பென் ஸ்டோக்ஸ் வேகப்பந்து வீச்சாளர்களைப் போல் எதிர்கொள்வதாலேயே தடுமாறுவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். எனவே லயன் போன்ற ஸ்பின்னர்களை எதிர்கொள்ள அவருக்கு அஸ்வின் கொடுத்த ஆலோசனை பின்வருமாறு.

- Advertisement -

அஸ்வின் அட்வைஸ்:

“ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக பென் ஸ்டோக்ஸ் நீண்ட காலமாக அவுட்டாகி வருகிறார். அவருக்கு எதிராக பந்து வீசியுள்ள நான் அதைப் பார்த்து வருகிறேன். அவர் சரியான அணுகுமுறையைக் கொண்ட சிறந்த வீரர். ஆனால் நீங்கள் வேகப் பந்துகளை எதிர்கொள்வதைப் போலவே சுழல் பந்துகளை எதிர்கொள்ள முடியாது. நீங்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக முதலில் பந்து கையிலிருந்து வெளியே வருவதைப் பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க: சாம்சனுடன் அந்த 2 பேரும் கதவை உடைச்சுகிட்டு டி20 உ.கோ டீம்ல கம்பேக் கொடுத்துருக்காங்க.. டிகே பாராட்டு

“பந்து பிட்ச்சாகும் இடத்தைப் பிடிப்பதே சுழல் பந்துகளுக்கு எதிராக விளையாடுவதில் உள்ள தேற்றமாகும். அதை செய்யாவிட்டால் நீங்கள் பாதிப்பை சந்திப்பீர்கள். ஸ்டோக்ஸ், பென் டக்கெட், ஐடன் மார்க்ரம் போன்ற மேற்கத்திய வீரர்கள் அதிகம் ஸ்வீப் அல்லது ரிவர்ஸ் ஸ்வீப் செய்வதை நான் பார்க்கிறேன். ஏனெனில் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர்களுடைய டெக்னிக் சரியாக இல்லை. நீங்கள் ஸ்வீப் அடிக்க முற்படும் போது லைனை முன்கூட்டியே பிடித்து தடுக்க முயற்சிப்பீர்களே தவிர, பந்து எப்படி வருகிறது என்பதைப் படிக்க மாட்டீர்கள்” என்று கூறினார்.

- Advertisement -