- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2015 – 2019இல் இங்கிலாந்து செஞ்சதை.. இப்போ இந்தியா செய்ய சுயநலமற்ற ரோஹித்தே காரணம்.. அஸ்வின் பாராட்டு

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நிறைவு பெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராக இருக்கிறோம் என்பதை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிரூபித்துள்ளது. மறுபுறம் பஸ்பால் என்ற பெயரில் அதிரடியாக விளையாடுகிறோம் என்று மார்த்தட்டக்கூடிய இங்கிலாந்து ஒரு வெற்றியைக் கூட பெறாமல் ஏமாற்றத்தைச் சந்தித்தது.

இந்நிலையில் 2015 – 2019 காலகட்டங்களில் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கும் அதிரடியான அணுகுமுறையை இங்கிலாந்து வெற்றிகரமாகப் பின்பற்றியதாக ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். தற்போது அந்த ஸ்டைலில் இந்தியா விளையாடுவதற்கு ரோகித் சர்மாவின் சுயநலமற்ற குணம் தான் காரணம் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சுயநலமற்ற ரோஹித்:

“ரோகித் சர்மாவிடம் நான் மிகவும் ரசிக்கும் ஒரு பெரிய தரம் என்னவெனில் அவர் மிகவும் சுயநலமற்ற நபர். நீங்கள் சுயநலமாக இருந்தால் களத்திற்கு சென்று உங்களால் சுதந்திரமாக ஆக்ரோஷமாக விளையாட முடியாது. ஆனால் பல தருணங்களில் தன்னுடைய சொந்தச் சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் விளையாடியும் ரோஹித் சர்மா பெரிய ரன்கள் அடிக்கிறார்”

“இந்த விஷயத்தைப் பொறுத்த வரை ரோகித் சர்மா மீது எனக்குப் பெரிய மரியாதை இருக்கிறது. அவர் இதை முன்னோக்கியும் எடுத்துச் செல்கிறார். அவர் நான் இன்று ரன்கள் அடித்துள்ளேன். என்னுடைய ஃபார்ம் நன்றாக இருக்கிறது. ஆனால் இங்கே நான் பாராட்டுவதற்கும் உத்வேகத்தை கொடுப்பதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று சொல்கிறார். நாம் சூப்பர்ஸ்டார் கலாச்சாரத்தை விளம்பரப்படுத்தக் கூடாது”

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:

“அடுத்தத் தலைமுறையில் அதை நாம் சாதாரணமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் நாம் கிரிக்கெட்டர்கள் மட்டுமே சினிமா சூப்பர்ஸ்டார் நடிகர்கள் கிடையாது. எனவே விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றப் பெரியச் சாதனைகளைப் புரிந்தவர்களின் இலக்குப் பெரிதாக இருக்க வேண்டும். தனிநபர்களைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது. முன்னேறிக் கொண்டிருக்கும் கிரிக்கெட்டில் தனி நபர்களின் இடம் சாதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படக்கூடாது என்று நாம் பேசுகிறோம்”

இதையும் படிங்க: அது ஒன்னும் சென்னை இல்ல.. சாம்பியன்ஸ் ட்ராபி இந்திய அணியில் கம்பீர் செய்துள்ள தவறை விமர்சித்த அஸ்வின்

“ரோகித் சர்மா அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். 2015 – 2019 காலகட்டங்களில் இங்கிலாந்து அதிரடியாக விளையாடி ஒருநாள் கிரிக்கெட்டை மாற்றியது. இந்தியா அந்தக் கொண்டாட்டத்தில் தாமதமாக இணைந்துள்ளது. ரோகித் சர்மா அந்தப் பாதையில் நம்மை அழைத்துச் செல்வதற்கான வழியைக் காண்பித்தார். அதற்கு 8 வருடங்கள் தேவைப்பட்டது. ஒருவேளை அது 6 வருடமாக இருந்திருந்தால் நாம் இன்னுமொருக் கோப்பையை வென்றிருப்போம். எனவே அதிரடியாக விளையாடும் பாதையில் ரோகித் மெழுகுவர்த்தியை ஏற்றி நம்மை மாற்றி வருகிறார்” என்று கூறினார்.

- Advertisement -