- Advertisement -
உலக கிரிக்கெட்

தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்ற தெ.ஆ அணியின் நட்சத்திர வீரர் குவிண்டன் டி காக் – என்ன நடந்தது?

தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குவிண்டன் டி காக் கடந்த 2012 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 54 டெஸ்ட் போட்டிகள், 155 ஒருநாள் போட்டிகள் மற்றும் 92 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் முடிந்த கையோடு 50 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

ஓய்வு முடிவில் இருந்து வெளியே வந்த குவிண்டன் டி காக் :

அதனை தொடர்ந்து கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு அவர் எந்தவொரு டி20 போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடவில்லை. அதேபோன்று அவர் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை என்றாலும் தென்னாப்பிரிக்க அணியை விட்டு வெளியேறிய அவர் உலகெங்கிலும் நடைபெற்று வந்த டி20 போட்டிகளில் விளையாடி வந்தார்.

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை அவர் ஏற்கனவே கடந்த 2021-ஆம் ஆண்டே ஓய்வை அறிவித்து விட்டார். இந்நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க அணியானது விரைவில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று விதமான கிரிக்கெட் போட்டியிலும் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்திற்கு முன்னதாக மீண்டும் தான் ஒயிட் பால் கிரிக்கெட்டில் விளையாட வருவதாக கூறி தனது ஓய்வு முடிவை வாபஸ் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலை வெளியிட்ட தென்னாப்பிரிக்க அணியின் வாரியம் குறிப்பிட்டதாவது :

- Advertisement -

குவிண்டன் டி காக்கிடம் கடந்த மாதம் நாங்கள் பேசியிருந்தோம். அப்போது அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மீண்டும் வருவதற்காக ஆர்வம் தெரிவித்தார். அடுத்து 2027 உலக கோப்பை வரை அவர் எங்களது அணிக்காக தொடர விரும்புவதாகும் அறிவித்திருந்தார். அவர் மீண்டும் எங்களது அணிக்கு வந்துள்ளது மேலும் பலத்தை சேர்த்துள்ளது என தென்னாப்பிரிக்க வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சேவாக் எதிர்கொண்ட பவுலர்ஸ் மாதிரி ரவூப், அப்ரிடி இல்ல.. ஓப்பனாக பேசிய அபிஷேக்கிற்கு.. சேவாக் அட்வைஸ்

இப்படி அவர் ஓய்வு முடிவை திரும்பப்பெற காரணம் யாதெனில் : தற்போது 32 வயதாகும் அவர் இன்னும் சில ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியும். அதோடு 2027 ஒருநாள் உலககோப்பை தொடரானது தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெறவுள்ள வேளையில் சொந்த மண்ணில் நடைபெறும் அந்த தொடரோடு சர்வதேச போட்டிகளில் இருந்து முற்றிலுமாக ஓய்வுபெற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -