அதுக்குள்ள அவசரப்பட்டு ரிட்டயர் ஆகுறாரே – தோனியின் மாபெரும் சாதனையை அதிரடியாக உடைத்த குயிண்டன் டீ காக்

Quinton De Kock 2
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த நிலையில் அடுத்ததாக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பின்தங்கியுள்ளது. 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் 2வது போட்டி செப்டம்பர் 9ஆம் தேதி ப்ளூம்போயிண்டன் நகரில் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 392/8 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் சதமடித்து 106 ரன்களும் மார்னஸ் லபுஸ்ஷேன் சதமடித்து 124 ரன்களும் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக தப்ரிஸ் சம்சி 4 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 393 ரன்களை துரத்திய தென்னாபிரிக்கா ஆரம்ப முதலே ஆஸ்திரேலியாவின் நேர்த்தியான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 41.5 ஓவரில் 269 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

- Advertisement -

அவசரமான ஓய்வு:
இத்தனைக்கும் அந்த அணிக்கு குயிண்டன் டீ காக் 45, கேப்டன் தெம்பா பவுமா 46 என துவக்க வீரர்கள் நல்ல ரன்களை எடுத்து 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறந்த துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் டுஷன் 17 ரன்களும் ஐடன் மார்க்ரம் ரன்களும் எடுத்து அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் ஹென்றிச் க்ளாஸென், டேவிட் மில்லர் தலா 49 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி ஆட்டமிழந்தனர்.

மறுபுறம் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு 123 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்த ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்களை எடுத்தார். முன்னதாக இப்போட்டியில் 45 ரன்கள் எடுத்த குயிண்டன் டீ கான் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 6000 ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற இந்திய ஜாம்பவான் எம்எஸ் தோனியின் சாதனை தகர்த்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. குயிண்டன் டீ காக் : 141 இன்னிங்ஸ்
2. எம்எஸ் தோனி : 166 இன்னிங்ஸ்
3. ஆடம் கில்கிறிஸ்ட் : 172 இன்னிங்ஸ்

- Advertisement -

கடந்த 2012இல் அறிமுகமாகி அதிரடியாக விளையாடும் துவக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தி நிலையான இடம் பிடித்து வரும் அவர் தென்னாப்பிரிக்காவின் மேட்ச் வின்னராகவும் நவீன கிரிக்கெட்டில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் செயல்பட்டு வருகிறார். இருப்பினும் நவீன கிரிக்கெட்டில் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக கடந்த வருடம் 29 வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இதையும் படிங்க: IND vs PAK : எங்களோட இந்த ஸ்ட்ரென்த்க்கு எதிரா இந்திய அணி சமாளிக்கிறது கஷ்டம் தான் – முகமது ரிஸ்வான் பேட்டி

அந்த நிலையில் இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெறும் 2023 உலகக் கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளிலும் 30 வயதிலேயே ஓய்வு பெறுவதாக அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவித்துள்ளார். அந்த அறிவிப்புக்கு பின் இப்படி ஒரு சிறப்பான சாதனையை படைத்துள்ள அவர் அவசரப்படாமல் இன்னும் சில வருடங்கள் விளையாடினால் கூட தோனியின் 10000 ரன்கள் சாதனையை உடைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement