ஆமா அதுக்காக தான் ரிட்டையர் ஆகுறேன்.. 31 வயதிலேயே ஓய்வு பெறுவதற்கான பின்னணியை – ஓப்பனாக சொன்ன டீ காக்

Quinton De Kock 2
- Advertisement -

சர்வதேச அரங்கில் முதன்மை கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக திகழும் தென்னாப்பிரிக்கா கடந்த சில வருடங்களாகவே தடுமாற்றுமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக கிரேம் ஸ்மித் தலைமையில் டீ வில்லியர்ஸ், அம்லா, ஜேக் காலிஸ் ஸ்டைன் போன்ற ஜாம்பவான்கள் ஓய்வுக்கு பின் தென்னாப்பிரிக்கா சற்று தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது என்றால் மிகையாகாது. அந்த சூழ்நிலையில் தற்போதைய அணியில் மிகவும் தரமான வீரராக கருதப்படும் குயிண்டன் டீ காக் படிப்படியாக ஓய்வு பெற்று வருவது தென்னாபிரிக்காவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இடது கை துவக்க வீரராக அதிரடியாக விளையாடி 3 வகையான தென்னாப்பிரிக்க அணியிலும் முதன்மை வீரராக உருவெடுத்தார். மேலும் மார்க் பவுச்சருக்கு பின் விக்கெட் கீப்பராகவும் நிரந்தரமான இடத்தை பிடித்த அவர் அதிரடியாக விளையாடி உலக ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார். இருப்பினும் பணிச்சுமையை நிர்வகித்து டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக அவர் கடந்த வருடம் 29 வயதிலேயே டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற விட்டார்.

- Advertisement -

வெளிப்படையான பேச்சு:
அந்த சூழ்நிலையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலாவது கடைசி வரை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் தற்போது இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் 30 வயதிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட்டில் கிடைக்கும் பணத்திற்காக இந்த ஓய்வு முடிவுகளை அறிவிக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கவில்லை என டீ காக் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “டி20 தொடர்களுக்காக ஓய்வு பெறுகிறேன் என்பதை நான் மறுக்கப் போவதில்லை. ஏனெனில் அதனால் உங்களுடைய கேரியரின் முடிவில் நிறைய பணம் கிடைக்கும். அத்துடன் நிறைய வீரர்கள் தங்களுடைய கேரியர் முடிவதற்கு முன்பாக வாழ்வை தரம் உயர்த்துவதற்கு விரும்புவார்கள். உலகின் எந்த ஒரு சாதாரண மனிதரும் இதை ஏதோ ஒரு வகையில் செய்வார்கள்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல கடந்த சில வருடங்களாகவே ட்ரெண்ட் போல்ட், ஜேசன் ராய் போன்ற நட்சத்திர வீரர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக நாட்டை விட உலகம் முழுவதிலும் நடைபெறும் ஐபிஎல் போன்ற டி20 தொடரில் விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். அதன் காரணமாக ட்ரெண்ட் போல்ட், ராய் ஆகியோர் ஏற்கனவே தேசிய அணியின் சம்பள ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி விட்டார்கள்.

இதையும் படிங்க: தோனி ஒன்னும் தியாகம்’லாம் பண்ணல.. ஆனா அதையும் தாண்டி ஒன்னு செஞ்சாரு.. கெளதம் கம்பீர் கருத்துக்கு – ஸ்ரீசாந்த் பதில்

தற்போது அவர்களை காட்டிலும் குயிண்டன் டீ காக் நேரடியாகவே ஓய்வு பெறுவதாக 30 வயதிலேயே அறிவித்துள்ளார். இந்த நிலைமையில் இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பைக்கு பின் சிறிய இடைவெளி எடுத்து விட்டு பின்னர் தம்முடைய வாழ்வின் அடுத்த இன்னிங்ஸ் பற்றிய இன்னும் சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement