குவாலிபயர் 2 : இன்றைய போட்டியில் ஜெயிக்கப்போவது யார்? – பெங்களூரா ? ராஜஸ்தானா? (விவரம் இதோ)

faf
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் முன்னேறிய வேளையில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலாவது குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Mohammed Siraj De Kock

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூரு அணி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் காரணமாக இன்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் விளையாடுகின்றனர்.

- Advertisement -

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்ததாக இறுதிப்போட்டியில் குஜராத் அணியை சந்திக்கிறது. நரேந்திரமோடி மைதானத்தில் இன்று நடைபெற உள்ள இந்த போட்டியில் வெற்றி பெற போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது. இந்த சீசனில் லீக் போட்டிகளில் 14 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் அணி 9 வெற்றி மற்றும் ஐந்து தோல்வி என இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது.

faf 1

அதேவேளையில் பெங்களூரு அணி 14 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி மற்றும் 6 தோல்வி என நான்காவது இடத்தை பிடித்திருந்தது. அதுமட்டுமின்றி இந்த சீசனில் இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ள இவ்விரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று உள்ளன. அதில் ஒரு முறை பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்திலும் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.

- Advertisement -

அதேபோன்று மற்றொருமுறை ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியுள்ளது. இதன் காரணமாக சமபலம் கொண்ட இவ்விரு அணிகளும் இன்று மோத இருப்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி இன்று நடக்கும் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. இன்றைய போட்டியை பொறுத்தவரை இதுவரை கோப்பையை கைப்பற்றாத பெங்களூரு அணியின் கை ஓங்கி உள்ளது என்றே கூறலாம்.

இதையும் படிங்க : சிக்ஸர் மழை ! ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட – டாப் 6 பேட்ஸ்மேன்கள்

ஏனெனில் கடைசியாக நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூரு அணி நல்ல நம்பிக்கையுடன் இந்த போட்டியை எதிர்கொள்ள உள்ளன. அதே வேளையில் குஜராத் அணியுடன் ஏற்பட்ட தோல்வியுடன் முமென்டத்தை இழந்து ராஜஸ்தான் அணி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement