சிக்ஸர் மழை ! ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட – டாப் 6 பேட்ஸ்மேன்கள்

Gayle
- Advertisement -

ஐபிஎல் டி20 தொடரில் ஒரு தரமான பவுலர் திறமையை வெளிப்படுத்தி விக்கெட்டுகள் எடுப்பதைவிட ஒரு சிறப்பான பேட்ஸ்மேன் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்டு ரன் மழை பொழிவதையே பெரும்பாலான ரசிகர்கள் விரும்புவார்கள். ஏனெனில் கிரிக்கெட் விளையாட்டை பொழுதுபோக்காகக் கருதும் பெரும்பாலான ரசிகர்கள் அதற்காக செலவழித்து மைதானத்திற்கு நேரடியாகச் சென்றும் தொலைக்காட்சியில் கட்டணம் செலுத்தியும் பார்க்கின்றனர்.

MS Dhoni 16

அதுவும் டி20 போட்டிகளை பார்ப்பதற்கு சற்று அதிகப்படியான தொகைகளை செலவு செய்யும் அவர்கள் அதில் எப்போதுமே டெஸ்ட் போட்டிகளை போல 120 – 150 ரன்கள் மட்டுமே அடிக்கப்படும் போட்டிகளை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள். மாறாக ஒவ்வொரு ஓவரிலும் பவுலர்களை பந்தாடி மிரட்டலாக பேட்டிங் செய்து ஓவருக்கு 10 ரன்கள் என்ற வகையில் 200 ரன்களை விளாசி பின்னர் அதை வெறித்தனமாக சேசிங் செய்யும் போட்டிகளையே அதிகமாக விரும்புவார்கள்.

- Advertisement -

மேலும் டி20 கிரிக்கெட்டில் எப்போதும் அதிரடியை எதிர்பார்த்து மைதானத்திற்கு செல்லும் ரசிகர்கள் பேட்ஸ்மேன்கள் தங்களை நோக்கி சிக்ஸர்கள் அடிக்க மாட்டார்களா அதை நாம் கேட்ச் பிடித்து கொண்டாட மாட்டோமா என்று ஏங்குவார்கள். அப்படி ரசிகர்களின் ஏக்கத்தை போக்க கூடிய பேட்ஸ்மேன்கள் எப்போதாவது முரட்டுத்தனமான பார்மில் இருந்தால் ஒரு போட்டி மட்டுமல்லாது அந்த சீசன் முழுக்க நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் அதிரடியாக பேட்டிங் சிக்ஸர்களை மழையாக பொழிந்து மலைபோல ரன்களை சேர்த்து தங்களது அணிக்கு வெற்றி தேடித் தருவார்கள். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்.

6. விராட் கோலி 38: கடந்த 2016 சீசனில் விஸ்வரூபம் எடுத்த இந்திய நட்சத்திரம் விராட் கோலி தனது பெங்களூர் அணிக்காக முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் 38 சிக்ஸர்களை பறக்கவிட்டு 4 சதங்கள் உட்பட 973 ரன்கள் குவித்து முழு மூச்சுடன் போராடிய போதிலும் பைனலில் அந்த அணி தோற்றது. இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்த அவர் அந்த வருடத்திற்கான ஆரஞ்சு தொப்பியை வென்றார்.

- Advertisement -

6. கிறிஸ் கெயில் 38: வெஸ்ட் இண்டீஸ் சூறாவளி புயல் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் தொடரில் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ள நிலையில் கடந்த 2015 சீசனில் 14 போட்டிகளில் 491 ரன்களை மட்டுமே அடித்தாலும் 38 மெகா சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்வித்த அவர் இந்த பட்டியலில் 6-வது இடத்தை பகிர்ந்து கொள்கிறார்.

Jos Buttler 116

5. ஜோஸ் பட்லர் 39*: இந்த வருடம் ராஜஸ்தானுக்காக அட்டகாசமாக பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 3 சதங்கள் உட்பட 718* ரன்களைக் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். அந்த அணி இன்னும் வெளியேறவில்லை என்ற நிலைமையில் இதுவரை 39* சிக்சர்களை பறக்கவிட்டுள்ள அவர் இந்தப் பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

4. கிறிஸ் கெயில் 44: 2009 – 2010 வரை கொல்கத்தாவுக்காக சுமாராக செயல்பட்டுவந்த கிறிஸ் கெயில் 2011இல் பெங்களூரு அணிக்கு வந்த முதல் வருடத்திலேயே 2 சதங்கள் 3 அரை சதங்கள் உட்பட 12 போட்டிகளில் 608 ரன்களை விளாசி மிரட்டினார். அந்த வருடம் அவரின் அதிரடியால் பெங்களூரு பைனல் சென்றாலும் தோற்றுப்போனது. இருப்பினும் 44 சிக்ஸர்களை பறக்க விட்டு ஆரஞ்சு தொப்பியையும் வென்று சாதனை படைத்த அவர் இந்தப் பட்டியலில் மீண்டும் 4-வது இடம் பிடிக்கிறார்.

3. கிறிஸ் கெயில் 51: இந்த பட்டியலில் மீண்டும் மீண்டும் கிறிஸ் கெய்ல் பெயர் இடம் பெறுகிறது என்பதே அவர் எந்த அளவுக்கு தரமான, எந்த அளவுக்கு ரசிகர்களை மகிழ்வித்தார் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் 2013 சீசனிலும் ஒருபடி மேலே சென்று பவுலர்களை பந்தாடிய அவர் பவுலர்களை 16 போட்டிகளில் 708 ரன்களை விளாசி 51 மெகா சிக்ஸர்களை தெறிக்க விட்டு இந்த பட்டியலில் 3-வது இடம் பெறுகிறார்.

- Advertisement -

குறிப்பாக புனேவுக்கு எதிராக வெறும் 66 பந்துகளில் 13 பவுண்டரி 17 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 175* ரன்கள் விளாசி டி20 போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர், அதிவேக சதம், ஒரு போட்டியில் அதிக ரசிகர்கள் உட்பட பல சாதனைகளை படைத்தது ரசிகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

russel

2. ஆண்ட்ரே ரசல் 52: வெஸ்ட் இண்டீஸ் அணியின் மற்றொரு அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் நின்ற இடத்திலிருந்து சிக்ஸர்களை பறக்க விடுவதில் வல்லவர். இவர் கடந்த 2019 சீசனில் உச்சபட்சமாக 14 போட்டிகளில் 4 அரை சதங்கள் உட்பட 510 ரன்களை விளாசினார். அந்த வருடம் 52 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் இந்தப் பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார்.

1. கிறிஸ் கெயில் 59: டி20 கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் கிறிஸ் கெய்ல் கடந்த 2012 சீசனில் பங்கேற்ற 15 போட்டிகளில் தனது வாழ்நாளில் உச்சபட்சமாக 1 சதம் 4 அரைசதங்கள் உட்பட 733 ரன்களை குவித்து வரலாற்றில் அடுத்தடுத்த சீசன்களில் (2011, 2012) ஆரஞ்சு தொப்பியை ஒரே வீரராக இன்றும் சாதனை படைத்துள்ளார்.

அந்த வருடம் 59 இமாலய சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்சர்களை அடித்து பேட்ஸ்மேனாக இன்றும் பல அதிரடி பேட்ஸ்மேன்கள் வந்தும் தொட முடியாத சாதனையை படைத்துள்ளார். இப்படி சிக்சர் மழை பொழிந்த அவர் வரலாற்றில் முதல் முறையாக இந்த வருடம் பங்கேற்காமல் போனாலும் ஐபிஎல் இருக்கும் வரை ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பார் என்றே கூறலாம்.

Advertisement