கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல இவங்களும் மேட்ச் பாக்க கொல்கத்தா வரங்களாம் – கங்குலி அறிக்கை

Ganguly
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கொல்கத்தா மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்த போட்டி தற்போது வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக மாற இருக்கிறது அதற்கு முதல் காரணம் யாதெனில் இந்திய அணி பங்கேற்கும், இந்தியாவில் நடைபெறும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுவாகும்.

Net

- Advertisement -

எனவே கொல்கத்தா நகர் முழுவதும் பிங்க் நிற விளக்குகளால் ஜொலிக்கின்றன மற்றும் பிங்க் பந்து டெஸ்ட் போட்டி குறித்த பதாகைகளும் போஸ்டர்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த போட்டி குறித்து பல்வேறு முக்கிய அம்சங்களை தெரிவித்த கங்குலி தற்போது மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி மம்தா பானர்ஜி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தவிர ஏகப்பட்ட கிரிக்கெட் பிரபலங்கள் இந்த போட்டியை நேரில் காண வருகிறார்களாம் அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அணில் கும்ளே மற்றும் கபில் தேவ் ஆகியோர் நேரில் வருகை தர இருப்பதாகவும் மேலும் கிரிக்கெட் விளையாட்டை தவிர்த்து சில பிரபலங்கள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிவி சிந்து மற்றும் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் போட்டியை நேரில் கண்டுகளிக்க வர இருப்பதாக கூறப்படுகிறது.

Sania 1

மேலும் போட்டியின் இடைவேளையின் போது முன்னாள் வீரர்கள் தங்களது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து மைதானத்தில் ரசிகர்களிடையே பேய் இருப்பதாகவும், டாஸ் போடப்பட்ட பிறகு பிங்க் பந்து பேராஷூட் வீரர்கள் மூலம் இரு அணி கேப்டன்களுக்கும் வழங்கப்படும் என்றும் பல புதிய தகவல்களை கங்குலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement