ராஜஸ்தான் அணிக்கெதிரான இன்றைய போட்டியின் பஞ்சாப் அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

KXIP
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் நான்காவது நாளான இன்றைய 4 ஆவது ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதல் முறையாக இளம் வீரர் சஞ்சு சாம்சன் தலைமை தாங்க உள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் காயம் காரணமாக சில் போட்டிகளில் விளையாட போவதில்லை. அதைப்போலவே முஸ்தபிசுர் ரஹ்மான், அன்ட்ரூ டை மற்றும் டேவிட் மில்லர் ஒரு வாரம் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். எனவே இவர்கள் முதல் போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று தெரியவந்துள்ளது.

rrvspbks

- Advertisement -

எனவே இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியை வெற்றி கொள்ள கொஞ்சம் போராட வேண்டியிருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் அணியில் ஓபனிங் விளையாட போகும் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் பஞ்சாப் அணியில் இன்று தொடக்க வீரர்களாக நிச்சயமாக களம் இறங்குவார்கள். இவர்கள் இருவரும் இணைந்து ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் மிகப்பிரமாண்டமான தொடக்கத்தை பஞ்சாப் அணிக்காக ஏற்படுத்தியுள்ளனர். எனவே இவர்கள் இருவரும் தான் ஓபனிங் விளையாட போகிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து கிறிஸ் கெயில் ஒன் டவுன் வீரராக களம் இறங்குவார், அதன் பின்னர் நிக்கோலஸ் பூரன், சர்பராஸ் கான் மற்றும் மந்தீப் சிங் களம் இறங்குவார்கள். இவர்கள் நான்கு பேருமே அதிரடியாக அடித்து ஆட கூடிய வீரர்கள் ஆவார்கள். அதிலும் குறிப்பாக கிறிஸ் கெயில் மற்றும் நிக்கலஸ் பூரன் இருவரும் இணைந்து பஞ்சாப் அணியின் ஸ்கோரை உயிர்த்த மிகப்பெரிய அளவில் தங்களது பங்களிப்பை முழுமையாக தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

pooran

இறுதி ஓவர்களில் விளையாட மந்தீப் சிங் நிச்சயமாக பயன்படுவார் என்றும் தெரிகிறது. பந்து வீச்சாளர்கள் ஆக களமிறங்க உள்ள ரவி பிஷ்னாய், அர்ஸ்தீப் சிங், முகமது சமி, கிறிஸ் ஜோர்டன் மற்றும் ஜய் ரிச்சர்ட்சன் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்பலாம். ஸ்பின் பவுலர்ளைப் பொறுத்த வரையில் ரவி பிஷ்னாய் மற்றும் அர்ஸ்தீப் சிங் விளையாட அதிக வாய்ப்புள்ளது. அவர்களைத் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளரை பொறுத்தவரையில் முகமது ஷமி, கிறிஸ் ஜோர்டான், மற்றும் ஜய் ரிச்ர்ட்சன் நிச்சயமாக இன்றைய போட்டியில் களம் இறங்குவார்கள்.

இன்றைய போட்டியில் இரு அணிகளுமே வெற்றிபெற மிக பெரிய அளவில் போட்டி போட்டுக் கொள்ளும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதிலும் குறிப்பாக இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் எந்த தொடரையும் கைப்பற்றாத பஞ்சாப் அணி இந்த தொடரை கைப்பற்ற ஆரம்பம் முதலே தீவிரம் காட்டும் என்று எதிர் பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisement