வெற்றிகள் வரல, பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பதிவிலிருந்து நீக்கப்படும் இந்திய ஜாம்பவான் – ரசிகர்கள் வரவேற்பு

RCB vs PBKS Extras
Advertisement

உலகப்புகழ் பெற்ற ஐபிஎல் தொடரின் 15வது சீசன் கடந்த மார்ச் – மே மாதங்களில் இந்தியாவின் மும்பை, அகமதாபாத் ஆகிய நகரங்களில் வெற்றிகரமாக ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய 2 அணிகளும் சேர்க்கப்பட்டதால் கோப்பையை வெல்வதற்கு முன்பை விட கடுமையான போட்டி நிலவியது. அதில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய ராஜஸ்தானை இறுதிப்போட்டியில் தோற்கடித்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் தனது முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தது. மறுபுறம் வெற்றிகரமான அணிகளான சென்னையும் மும்பையும் வரலாற்றில் முதல் முறையாக 10 தோல்விகளை சந்தித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

அதேபோல் ஹைதராபாத், பஞ்சாப், கொல்கத்தா போன்ற அணிகள் வழக்கம்போல சுமாராக செயல்பட்டு பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறின. குறிப்பாக காலம் காலமாக எதிரணிகளிடம் தோல்வியடைவதற்காவே உருவாக்கப் பட்டது போல் விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் இந்த வருடம் கேஎல் ராகுல் வெளியேறியதால் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத மயங்க் அகர்வால் தலைமையில் களமிறங்கியது. ஆனால் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் அழுத்தத்தால் கடந்த வருடம் 400 ரன்களை அடித்த அவர் இந்த வருடம் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு பின்னடைவை ஏற்படுத்தினார். மேலும் அவரது தலைமையில் ஆரம்ப முதலே சீரான வெற்றிகளை பதிவு செய்ய தவறிய அந்த அணி 6வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

- Advertisement -

நீக்கப்படும் கும்ப்ளே:
இந்நிலையில் முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவில் வழக்கம்போல தோல்வியடைந்த அந்த அணி அடுத்த வருடம் கோப்பையை வெல்வதற்கான இப்போதே துவக்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக சுமாராக செயல்பட்ட மயங்க் அகர்வாலையும் பயிற்சியாளராக செயல்பட்ட அனில் கும்ப்ளேவையும் அந்த அணி நீக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் முதல் சீசன் என்பதால் மயங்க் அகர்வாலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க நினைக்கும் அந்த அணி நிர்வாகம் அவரை நீக்கப் போவதாக வந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

 

- Advertisement -

இருப்பினும் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அனில் கும்ப்ளேவின் செயல்பாடுகளில் திருப்தியளிக்காத்தால் அவருடனான ஒப்பந்தத்தை பஞ்சாப் நிர்வாகம் இந்த வருடத்துடன் முடித்துக்கொள்ள விரும்புவதாக தற்போது அதிகாரபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2020இல் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற அனில் கும்ப்ளே தலைமையில் 2020, 2021 ஆகிய சீசன்களில் 5வது இடத்தை மட்டுமே படித்த பஞ்சாப் 10 அணிகளாக விரிவுபடுத்தப்பட்ட இந்த வருட தொடரில் 6வது இடத்தை மட்டுமே பிடித்தது.

வெற்றிகள் இல்லை:
அந்த வகையில் அவரது தலைமையில் பெரிய அளவில் வெற்றியை காண முடியவில்லை என்பது சமீப காலங்களில் அந்த அணி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவரது தலைமையில் பஞ்சாப் அணி விளையாடி அணுகுமுறையை பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. குறிப்பாக அவரது தலைமையில் நிறைய போட்டிகளில் சிறப்பாக விளையாடி கையில் வைத்திருந்த வெற்றியை கடைசி சில ஓவர்களில் சொதப்பி பஞ்சாப் கோட்டை விட்டது.

Kumble

- Advertisement -

மேலும் தொடக்க வீரராக களமிறங்க பிறந்தவர் என இந்த உலகமே அறிந்த கிறிஸ் கெயிலை 2020 சீசனில் 3வது இடத்தில் களமிறக்கியது போன்ற அவருடைய சில தேவையற்ற முடிவுகள் அணிக்கு வெற்றியை தேடி கொடுக்கும் வகையில் அமையவில்லை. அதனால் அடுத்த வருடம் அவரை தலைமை பயிற்சியாளர் பதவியில் வைத்துக்கொள்ள பஞ்சாப் அணி விரும்பவில்லை என்று தற்போது நம்பத் தகுந்த செய்திகள் வெளியாகியுள்ளது. இதைப் பார்க்கும் நிறைய ரசிகர்கள் பஞ்சாப் அணியின் முடிவை வரவேற்று சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

அடுத்த கோச்:
மேலும் இப்படி பஞ்சாப் அணி நிர்வாகம் பயிற்சியாளரை மாற்றுவது இது புதிதல்ல. ஏனெனில் சஞ்சய் பங்கர் (2014 – 2016), வீரேந்திர சேவாக் (2017), பிராட் ஹாட்ஜ் (2018), மைக் ஹெசன் (2019) என கடந்த 8 வருடங்களில் கும்ப்ளேவையும் சேர்த்து 5 பயிற்சியாளர்களை அந்த அணி நிர்வாகம் மாற்றியுள்ளது.

அடுத்ததாக ட்ரேவர் பெய்லிஸ் அல்லது இங்கிலாந்தை அதிரடிப் படையாக மாற்றி உலக கோப்பையை வென்று கொடுத்து சமீபத்தில் ஓய்வு பெற்ற இயன் மோர்கன் அல்லது கடந்த வருடம் நடைபெற்ற இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ரவி சாஸ்திரி ஆகியோரில் யாரையாவது ஒருவர் அடுத்த பயிற்சியாளராக நியமிக்க ஆலோசனை நடத்தி வரும் பஞ்சாப் அணி நிர்வாகம் அதை விரைவில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement