1.5 கோடிக்கு உலகின் நம்பர் 1 டி20 வீரரை விலைக்கு வாங்கிய பஞ்சாப் கிங்ஸ் – விவரம் இதோ

KXIP
- Advertisement -

சென்னையில் நடைபெற்ற 2021 க்கான ஐபிஎல் போட்டியின் ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவைப்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து தங்களது அணியில் சேர்த்துக் கொண்டது,
கடந்த ஆண்டு 2020க்கான ஐபிஎல் போட்டி கொரோனா காரணமாக துபாயில் கோலாகலமாக நடைபெற்றது, இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பலமான அணியாக திகழும் அணிகளில் பஞ்சாப் அணியும் மிக முக்கியமான ஒரு அணியாகும். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2021 ஐபிஎல் போட்டியில் தனது பெயரை பஞ்சாப் கிங்ஸ் என மாற்றி அமைத்துள்ளது.

ipl trophy

கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்த ஆண்டு மிக சிறப்பாக செயல்பட்டது. இருந்தபோதும் யாரும் எதிர்பாராத வகையில் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் கிருஷ்ணப்ப கௌதம், மேக்ஸ்வெல்,ஜிம்மி நீஷம் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் மிக சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இவர்களில் யாரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை.

- Advertisement -

இதன் காரணமாக கிளன் மேக்ஸ்வெல், கருண் நாயர்,முஜிபுர் ரஹ்மான், செல்டன் காட்ரெல், கிருஷ்ணப்ப கௌதம், ஜிம்மி நீஷம் போன்ற வீரர்கள் அணியில் இருந்து இந்தாண்டு அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்நிலையில் அதிகப்படியான வீரர்கள் அந்த அணிக்கு தேவைப்பட்டதால் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின் ஏலத்தில் மிகத் தெளிவாக தேர்வு செய்து தங்களது அணிக்கு தேவைப்படும் வீரர்களை ஏலத்தில் வாங்கியது.

malan

வருகிற 2021க்கான ஐபிஎல் போட்டியில் எப்படியாவது டைட்டில் பட்டத்தை முதன் முறையாக வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் உட்பட பல அதிரடி வீரர்கள் தங்களது அணியில் இணைத்துள்ளது. அதிலும் குறிப்பாக சர்வதேச டி20 கிரிக்கெட்டின் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இங்கிலாந்து அணியின் வீரரான டேவிட் மலனை 1.5 கோடிக்கு அடிப்படை விலையில் ஏலம் எடுத்து அசதியுள்ளது.

- Advertisement -

Malan-1

டேவிட் மலன் 1.5 கோடி

ஜெய் ரிச்சர்ட்சன் 14 கோடி

- Advertisement -

தமிழக வீரர் ஷாருக்கான் 5.25 கோடி

ரிலே மேர்டித் 8 கோடி

- Advertisement -

மொய்செஸ் ஹென்றிக்ஸ் 4.2 கோடி

ஜலஜ் சாக்சேன 30 லட்சம்

உகர்ஷ் சிங் 20 லட்சம்

சவுரப் குமார் 20

இப்படி பலம் வாய்ந்த வீரர்களை தேர்வு செய்து மற்ற அணிகளுக்கு சற்று அச்சத்தை பஞ்சாப் அணி ஏற்படுத்தியுள்ளது.

Advertisement