சி.எஸ்.கே அணியில் புஜாரா தேர்வாக இதுவே காரணம். புஜாரா கூறிய நெகிழ்ச்சியான வார்த்தை – விவரம் இதோ

Pujara-1

நடந்து முடிந்துள்ள ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சில வீரர்களை வாங்கியது. இங்கிலாந்தின் மொயின் அலியை ரூ.7 கோடிக்கும், கிருஷ்ணப்ப கவுதமை ரூ.9.25 கோடிக்கு ஏலம் எடுத்து ஆச்சிரியப்பட வைத்தது சிஎஸ்கே. டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் குட்டி டிராவிடாக கருதப்படும் செடேஷ்வர் புஜாராவை ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்து அனைவரைின் புருவங்களையும் உயர்த்தியுள்ளது சிஎஸ்கே. ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனான புஜாரா எப்படி டி20 பார்மெட்டுக்கு செட் ஆவார் என சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

Cheteshwar Pujara

ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக கடந்த 2008 முதல் 2014 வரை புஜாரா விளையாடியுள்ளார். அதன் மூலம் மொத்தம் 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 390 ரன்களை அவர் குவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் 99.74. சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி மூலமாக ஐபிஎல்’இல் புஜாரா கம்பேக் கொடுக்க உள்ளார்.

புஜாராவால் கிரிக்கெட்டின் அனைத்து ஷாட்டுகளை விளையாட முடியும். ஆனால் என்னவோ புஜாரா டெஸ்ட் போட்டிக்குதான் செட் ஆவார் என பிசிசிஐ எப்போதோ முடிவு செய்துவிட்டது. இந்தியாவின் சுவர் ராகுல் டிராவிட் ஓய்வுப்பெற்ற பின்பு அவரின் இடத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் நிலைத்து நின்று ஆடக்கூடிய பேட்ஸ்மேனை தேடிக்கொண்டிருந்த நிலையில் அப்போது அணிக்குள் வந்தவர்தான் புஜாரா. அப்படி இந்திய டெஸ்ட் அணியின் 3ஆவது பேட்ஸ்மேனாக தன்னுடைய டெஸ்ட் இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

pujarashot

அப்போதிலிருந்தே புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டுக்குதான் செட் ஆவார் என்ற மனநிலைக்கு ரசிகர்களும் வந்துவிட்டனர். இந்தியாவுக்காக மொத்தம் 5 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் கடைசியாக 2014 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக ஆடினார் . அதன் பின்பு ஒருநாள் போட்டிகளில் புஜாராவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அதனால் தன்னுடைய திறமையையை அவரால் நிரூபிக்க முடியாமல் போனது என்றும் சொல்லலாம்.

- Advertisement -

புஜாரா பந்துகளை சகட்டுமேனிக்கு தூக்கி அடிக்க கூடிய வீரரல்ல, ஆனால் தன்னுடைய நேர்த்தியான டைமிங் ஷாட்டுகள் மூலம் “கேப்புகளில்” பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி ரன் எடுக்க முடியும். அதேபோல அவரால் நேரத்திற்கேற்ப்ப சிக்ஸர்களையும் விளாச முடியும். கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் புஜாரா “எதனை வைத்து என்னால் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாட முடியும் டி20களில் விளையாட முடியாது என்ற முடிவுக்கு வந்தார்கள் என தெரியவில்லை. ஐபிஎல் அணிகள் எதனை வைத்து என்னை தேர்வு செய்யவில்லை. இது சங்கடமாக இருக்கிறது” என தெரிவித்திருந்தார்.

ஐபிஎல் தொடர்பாக அண்மையில் பேசிய புஜாரா “ஐபிஎல் போட்டிகளில் ஓர் அங்கமாக இருக்க விரும்புகிறேன். எனக்கு விளையாட வாய்ப்பளித்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன்” என்றார். புஜாரா அத்தனை உறுதியுடன் தெரிவித்த வார்த்தைகள் சிஎஸ்கே நிர்வாகத்தை நிச்சயம் கவர்ந்திருக்கும் என்றே தோன்றுகிறது. இது குறித்து பேசியுள்ள சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி “ஆஸ்திரேலியாவில் புஜாரா அபாரமாக விளையாடினார். அவருக்கான அங்கீகாரமாகவும் அவரை கெளரவிக்கும் வகையிலும் ஏலத்தில் எடுத்திருக்கிறோம்.

அவர் ஒரு உண்மையான வீரர் தன்னுடைய வியர்வையையும் ரத்ததையும் நாட்டுக்காக அர்ப்பணித்தவர். அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.புஜாரா கண்டிப்பாக இந்தாண்டு சிறப்பாக ஆடி தன் திறமையை அனைவருக்கும் வெளிபடுத்துவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.