இன்னும் 38 ரன்கள் மட்டும் அடித்தால் சச்சின், டிராவிடை கடந்து சாதனை படைக்கவுள்ள புஜாரா – விவரம் இதோ

Pujara-1
- Advertisement -

இந்தியாவுக்கு கடந்த பல வருடங்களாகவே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பேட்டிங்கை கொடுத்து வருகிறார் சட்டீஸ்வர் புஜாரா.இந்தியாவின் அடுத்த டிராவிட் என்றே சொல்லும் அளவில் தடுப்பு ஆட்டம் ஆடக்கூடிய வித்தைக்காரர்.இவர் கிரீஸுக்கு வந்தாலே பல வேகப்பந்து வீச்சாளர்கள் அலறுவார்கள். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கூட ஜோஸ் ஹெஷல்வுட் இவரது தடுப்பாட்டத்தால் டென்ஷனாகி இவருக்கு பந்து வீசி வீசி களைத்து விட்டேன், இனி இவரை முடிந்த வரை அவாய்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்.

pujara 2

- Advertisement -

இப்படி பல்வேறு தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி கொண்டு வருகிறார். இப்போது நடைபெற்று கொண்டு இருக்கும் இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் 73 ரன்கள் அடித்தார்.இதன் மூலம் இந்திய மண்ணில் இங்கிலாந்து எதிராக 900 ரன்களை கடந்தார்.அந்த போட்டி முடிவில் 902 ரன்கள் அடித்து வைத்திருந்தார். இன்னும் 98 ரன்கள் அடித்தால் இந்திய மண்ணில் இங்கிலாந்து எதிராக 1000 ரன்களை கடந்த நான்காவது வீரர் என்ற பெருமையை பெறுவார் என்று கூறப்பட்டது.

எப்படியும் இரண்டாவது டெஸ்டிலேயே இவர் கடப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை சேர்த்தே 43 ரன்கள் தான் அடித்துள்ளார். இந்நிலையில் நானாகாவது டெஸ்ட் போட்டியில் ஆடி வரும் புஜாரா முதல் இன்னிங்ஸில் 17 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

Pujara 2

இன்னும் ஒரு இன்னிங்ஸ் பாக்கியுள்ள நிலையில் 38 ரன்கள் மட்டும் அவர் ஒருவேளை எடுக்க வேண்டும் அப்படி எடுக்கும் பட்சத்தில் இந்திய மண்ணில் இங்கிலாந்து எதிராக 1000 ரன்களை கடந்த நான்காவது வீரர் என்ற பெருமையை பெறுவார்.

Pujara-2

இதுவரை இந்திய மண்ணில் இங்கிலாந்து எதிராக 1000 ரன்களை கடந்த வீரர்கள் கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத், விராட் கோலி ஆகிய மூவர் ஆவார்கள்.சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் கூட இந்தப்பட்டியலில் இடம்பிடிக்கவில்லை.எனவே புஜாரா 38 ரன்களை அடிப்பாரா அந்தப் பட்டியலில் இடம்பிடிப்பாரா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement