இங்கிலாந்தில் விளையாடுனது மாதிரிதான் இங்கயும் விளையாட போறேன் – நாளைய டெஸ்ட் குறித்து புஜாரா

Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை கான்பூர் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஓய்வில் இருப்பதனால் ரஹானே கேப்டனாகவும், புஜாரா துணைக்கேப்டனாகவும் செயல்படுகின்றனர். அதுமட்டுமின்றி சீனியர் வீரர்கள் பலர் இந்த தொடரில் ஓய்வில் உள்ளதால் இந்திய அணி எவ்வாறு நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட போகிறது ? என்கிற கேள்வி அனைவரிடமும் உள்ளது.

INDvsNZ

- Advertisement -

அதேவேளையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் பேட்டிங்கில் ரன்களை குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். ஏனெனில் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் சமீப காலமாகவே ரன் குவிக்க தடுமாறி வருவதுடன், சதம் அடிக்காமல் விளையாடி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக புஜாரா கடந்த 2019-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த பிறகு 22 போட்டிகளாக சதம் அடிக்காமல் விளையாடி வருகிறார். இதுவரை 90 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 சதங்களுடன் 6494 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தான் சதம் அடிக்காதது குறித்து கவலைப்பட போவதில்லை என்றும் தான் எப்படி விளையாடப் போகிறேன் ? என்பது குறித்தும் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

pujara 2

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் 50, 80, 90 ரன்களில் ஆட்டமிழந்து வருகிறேன். எப்போதும்போல இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். சதம் அடிக்கவில்லையே என்று கவலைப்பட வில்லை. அப்படி கவலைப்பட்டால் எனது ஆட்டம்தான் பாதிக்கும். அணியின் ஸ்கோர் தான் முக்கியம் அதை உயர்த்த முயற்சிப்பேன். அப்படி விளையாடும் பட்சத்தில் நான் சதம் அடிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார் .

- Advertisement -

இதையும் படிங்க : இந்த 2 பேர்ல ஒருத்தர் இந்திய அணிக்காக விளையாடியே ஆகனும் – முதல் போட்டியில் அறிமுகமாகப்போவது யார்?

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எனது பேட்டிங்கில் எந்தவித மாற்றத்தையும் நான் செய்யவில்லை. ஒவ்வொரு போட்டியையும் மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புகிறேன். இங்கிலாந்தில் கொஞ்சம் பயமின்றி விளையாடினேன். அதேபோன்ற மனநிலையுடன் இந்தியாவிலும் கொஞ்சம் பயமின்றி அதிரடியாக விளையாட உள்ளேன் என்று புஜாரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement