ஆமைவேக ஆட்டக்காரரான புஜாராவின் புயல் வேக ஆட்டத்திற்கு இதுதான் காரணமாம் – புஜாரா ஓபன் டாக்

Pujara
- Advertisement -

விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் இந்தியா விரைவாக ரன்களை சேர்த்து தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Pujara 1

- Advertisement -

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது இரண்டாவது இன்னிங்சில் ரோகித் மற்றும் புஜாரா அமைத்த அதிரடி பாட்னர்ஷிப் என்று கூறலாம். அதிலும் குறிப்பாக முதல் 50 முதல் 60 பந்துகளில் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே அடித்திருந்த புஜாரா அதன் பின்னர் பவுண்டரி மற்றும் சிக்சர் என அதிரடியாக விளையாடினார். முதல் 60 பந்துகளில் ஒற்றை இலக்கத்தை தாண்டாத புஜாரா அடுத்து 88 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் என 81 ரன் குவித்து அணியின் ரன் குவிப்பு உதவினார். இதுகுறித்து புஜாரா அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : நான் விளையாட வந்ததும் மறுமுனையில் ரோகித் சர்மா நல்ல ஷாட்டுக்களை தேர்ந்தெடுத்து ஆடினார். அவரின் ஆட்டம் அதிரடியாக இருந்ததால் நான் அதிரடியை என் கையில் எடுக்க கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டேன்.

Pujara-2

அதன்பின் இந்த ஆடுகளத்தில் கண்டிப்பாக என்னால் வேகமாக ஆட முடியும் என்று நினைத்தேன். இதனால் எங்கள் பார்ட்னர்ஷிப் வலுப்படுத்த நான் அதிரடியாக ஆடினேன். ரோகித் உடன் இணைந்து நான் அதிரடியாக ஆடினால் அணிக்கு ரன் விரைவாக வரும் என்று நான் நினைத்தேன் மேலும் அதனை செயல்படுத்தும் விதமாக நான் என் மனதை மாற்றி வேகமாக ரன்குவிக்க ஆரம்பித்தேன் என்னாலும் அதிரடியாக ஆட முடியும் என்ற என்மனநிலையே என் அதிரடிக்கு காரணம் என்று புஜாரா கூறினார்.

Advertisement