டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு இப்படி ஒரு பெயர் கிடைக்க இதுவே காரணம் – புஜாரா வெளிப்படை

Pujara
- Advertisement -

இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா 2010ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6283 ரன்களை குவித்துள்ளார். ராகுல் டிராவிட் அணியில் இருந்து வெளியேறிய பிறகு அந்த இடத்தை கச்சிதமாக பிடித்துக் கொண்ட புஜாரா தனது நிலையான கட்டத்தின் மூலம் பல போட்டிகளில் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளார். கடந்த முறை ஆஸ்திரேலியா சென்ற போது கூட 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கைப்பற்றியபோது இவரது பங்களிப்பு பெருமளவில் இருந்தது.

pujara

- Advertisement -

அதிலும் குறிப்பாக சிட்னி டெஸ்ட் போட்டியில் இவர் விளையாடிய இன்னிங்ஸ் இதுவரை யாராலும் மறக்க முடியாத ஒன்று. அப்படிப்பட்ட வீரரான இவருக்கு தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இவரது ஆட்டம் மோசமாக உள்ளது. அதுமட்டுமின்றி கடைசியாக 2019ஆம் ஆண்டு சதம் அடித்த இவர் இதுவரை சதம் விளாசவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் தற்போதைய இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி என சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என குரல்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னை “ராக்” என்று அழைப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து தற்போது புஜாரா பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பலமுறை நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போது பந்து புல்லட் வேகத்தில் வருவதை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்வது என்பது அவ்வளவு எளிது கிடையாது. அதிலும் குறிப்பாக அயல்நாடுகளில் விளையாடும் போது பந்து மிகவும் வேகமாகவும் வரும். அப்போதெல்லாம் நாம் அமைதியை பின்பற்றி ஆட்டத்தை டெவலப் செய்ய வேண்டும்.

pujara 2

அந்த வகையில் நான் எவ்வளவு நேரம் ஆனாலும் பொறுமையை காத்து புல்லட் வேகத்தில் வரும் பந்துகளை கூட சமாளித்து விளையாடுவதால் தனக்கு “ராக்” என்ற பெயர் கிடைத்ததாக புஜாரா கூறியுள்ளார். எந்த பந்து பவுன்ஸ் ஆகி வரும் என்பதை நாம் அவ்வளவு எளிதில் கணித்து விட முடியாது. நான் எத்தனை பந்துகளை உடம்பில் அடி வாங்கினாலும் என்னுடைய கையில் உள்ள கிளவுஸ் அல்லது பேட்டிலோ படக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன் என்றும் புஜாரா கூறியுள்ளார்.

pujara 1

இந்திய அணியின் அடுத்த தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படும் இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அண்மையில் இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி இவர் மிகவும் பொறுமையாக விளையாடுவதால் அணியின் ரன் குவிப்பு பாதிக்கப்படுவதாகவும் மற்ற வீரர்களும் இவரால் பிரஷர் ஆவதாக கூறப்படுவதால் இவரை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற பேச்சும் அதிகளவில் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement