- Advertisement -
உலக கிரிக்கெட்

ஆஹா ஓஹோ பாக் பவுலரை புரட்டிய புஜாரா ! மீண்டும் சதமடித்து ரன்மழை – இந்திய கம் பேக் உறுதி

இங்கிலாந்தின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரின் டிவிஷன் 2 பிரிவில் சசக்ஸ் அணிக்காக இந்தியாவின் நட்சத்திர வீரர் புஜாரா கடந்த ஒரு மாதமாக விளையாடி வருகிறார். அதில் மே 5-ஆம் தேதி துவங்கிய மிடில்சக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற சசக்ஸ் தனது முதல் இன்னிங்சில் 392 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதில் புஜாரா 16 ரன்களில் அவுட்டானாலும் அலி ஓர் 99, டாம் அஸ்லோப் 113, ஜார்ஜ் கார்டோன் 53 போன்ற வீரர்கள் தேவையான நல்ல ரன்களை எடுத்து அசத்தினார்கள்.

அதை தொடர்ந்து களமிறங்கிய மிடில்சக்ஸ் தனது முதல் இன்னிங்ஸ்சில் சசக்ஸ் அணியின் பந்துவீச்சுக்கு எதிராக ஓரளவு மட்டுமே தாக்குப் பிடித்து 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு மேக்ஸ் ஹோல்டன் 58, லுக் ஹோல்மன் 82, மார்ட்டின் ஆண்டர்சன் 55 போன்ற வீரர்கள் தேவையான ரன்களை எடுத்த போதிலும் அந்த அணியால் முன்னிலை பெற முடியவில்லை.

- Advertisement -

புஜாரா விஸ்வரூபம்:
அதை தொடர்ந்து 34 ரன்கள் முன்னிலை பெற்ற சசக்ஸ் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய போது அந்த அணியின் தொடக்க வீரர்கள் அலி ஓர் 0, கேப்டன் டாம் ஹெய்ன்ஸ் 0 என அடுத்தடுத்து டக் அவுட்டாகி ஆரம்பத்திலேயே மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 6/2 என மோசமான தொடக்கத்தை பெற்ற சசக்ஸ் அணிக்கு களமிறங்கிய புஜாரா வழக்கம்போல களத்தில் நங்கூரத்தை போட்டு தனது அணியை மூழ்க விடாமல் எதிரணி பவுலர்களை நிதானமாக எதிர்கொண்டார்.

அவருக்கு உறுதுணையாக டாம் அஸ்லோப் 66 ரன்கள் எடுத்து 142 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் தப்பிய சசக்ஸ் அணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த புஜாரா நேரம் செல்ல செல்ல மிடில்சக்ஸ் பவுலர்கள் களைப்டையும் அளவுக்கு அவுட்டாகாமல் திணற திணற அடித்து சதமடித்தார்.

- Advertisement -

ஆஹா ஓஹோ பவுலர்:
குறிப்பாக மிடில்சக்ஸ் அணிக்காக விளையாடும் பாகிஸ்தான் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியை அசால்டாக எதிர்கொண்ட புஜாரா அவரிடம் அவுட்டே ஆகாமல் அவரின் பந்துகளில் அட்டகாசமான பவுண்டரிகளை அடித்து நொறுக்கினார். அதிலும் அவர் வீசிய ஒரு பந்தில் புஜாரா அப்பர் கட் சிக்ஸர் அடித்ததை பார்த்த இந்திய ரசிகர்கள் இந்த பவுலரை தான் பாகிஸ்தான் ரசிகர்கள் ஆகாயசூர பவுலர், உலகின் நம்பர் 1 பவுலர் என ஆஹா ஓஹோ என்று மெச்சி கொள்கிறார்களா என்று புஜாராவை கொண்டாடினார்கள்.

அப்படி கடைசி வரை அவுட்டாகாமல் 22 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்த புஜாரா 170* ரன்கள் விளாச அவருடன் டாம் கிளார்க் 77* ரன்கள் எடுத்ததால் சசக்ஸ் தனது 2-வது இன்னிங்சை 335/4 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்து வலுவான நிலையை எட்டியது. இந்த கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஏற்கனவே முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்து ஹாட்ரிக் சதங்களை அடித்திருந்த புஜாரா இப்போட்டியிலும் சதமடித்து 4 போட்டிகளில் தொடர்ச்சியாக சதங்களை விளாசி முரட்டுத்தனமான பார்முக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

இதுவரை 4 போட்டிகளில் 7 இன்னிங்சில் களமிறங்கிய அவர் முறையே 6, 201*, 109, 12, 203, 16, 170* என சசஸ் அணிக்காக ரன்மழை பொழிந்து வருகிறார். 2 சதங்கள் 2 இரட்டை சதங்கள் உள்பட 717 ரன்களை 143.40 என்ற மலைக்க வைக்கும் பேட்டிங் சராசரி குவித்துள்ள புஜாரா தாம் இந்திய அணிக்குள் மீண்டும் நுழைவதற்கு தகுதியானவன் என்று நிரூபித்துள்ளார்.

கம் பேக் உறுதி:
கடந்த 10 வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியில் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டுக்கு பின் அவரின் இடத்தில் அவரைப் போலவே பொறுமையின் சிகரமாய் விளையாடி இந்தியாவிற்கு பல வெற்றிகளைத் தேடி கொடுத்த புஜாரா “டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்” பேட்ஸ்மேனாக அறியப்பட்டார். கடைசியாக கடந்த 2019இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

ஆனால் அதன்பின் 2 வருடங்களாக சதமடிக்க முடியாமல் திணறிய அவர் கடந்த பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரின்போது அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலைமையில் இந்தியா அடுத்ததாக வரும் ஜூலை 1ஆம் தேதி இதே இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் விளையாட உள்ளது.

இதையும் படிங்க : கடைசி ஓவரில் தோனியிடம் கோரிக்கை வைத்த பிராவோ. கதறவிட்ட தோனி – என்ன நடந்தது?

2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் அந்த தொடரில் தற்போது கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ரன் மழை பொழிந்து பார்முக்கு திரும்பியுள்ள புஜாரா மீண்டும் தேர்வு செய்யப்படுவதற்கு பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -