கடைசி ஓவரில் தோனியிடம் கோரிக்கை வைத்த பிராவோ. கதறவிட்ட தோனி – என்ன நடந்தது?

Bravo
- Advertisement -

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முக்கியமான 55-வது லீக் போட்டியில் சென்னை அணியானது 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக முதலில் பேட்டிங் செய்து 208 ரன்கள் என்ற பெரிய ரன்களை அடித்தது தான். இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக துவக்க வீரர்களான ருதுராஜ் 41 ரன்களும், டேவான் கான்வே 87 ரன்களையும் குவித்தனர். பின்னர் மூன்றாவது வீரராக களமிறங்கிய சிவம் துபே 32 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க அடுத்ததாக விளையாடிய ராயுடு 5 ரன்களில் வெளியேறினார்.

Ruturaj

பின்னர் 5 ஆவது வீரராக களமிறங்கி விளையாடிய தோனி 8 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என 21 ரன்கள் அடித்து அசத்தினார். அதனைதொடர்ந்து 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியால் 117 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்ததால் 91 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் சி.எஸ்.கே அணி பேட்டிங் செய்த 20 ஆவது ஓவரின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை தற்போது பிராவோ பகிர்ந்துள்ளார். அதன்படி இருபதாவது ஓவரை வீசிய நோர்க்கியா அந்த ஓவரின் 2வது மற்றும் 3வது பந்தில் அடுத்தடுத்து மொயின் அலி மற்றும் உத்தப்பா ஆகியோரை ஆட்டமிழக்க வைத்தார்.

bravo 1

அதனைத் தொடர்ந்து நான்காவது பந்தில் ஹாட்ரிக் விடக்கூடாது என்பதற்காக பிராவோ அந்த பந்தை தடுத்து சிங்கிள் ஓடினார். பின்னர் கடைசி இரண்டு பந்துகளையும் தோனி எதிர்கொள்ள இருந்தார். இந்நிலையில் கடைசி 2 பந்துகளில் பிராவோ தோனியிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

- Advertisement -

அதன்படி நீங்கள் என்னை ரன் ஓட வைக்க வேண்டாம் என்றும் அந்த பந்துகளில் பவுண்டரி அடிக்க முயற்சி செய்யுங்கள் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் கடைசி இரண்டு பந்துகளையும் தோனி பவுண்டரி அடிக்க முடியாமல் தலா 2 ரன்ஸ் ஓடினார். இதனால் களைத்துப்போன பிராவோ நான் போட்டி முடிந்ததும் கூறியதாவது : நான் கடைசி இரண்டு பந்துகளையும் தோனியை பவுண்டரி அடிக்குமாறு கூறினேன்.

இதையும் படிங்க : பேட்டிங் செய்ய களமிறங்கும் முன் தோனி பேட்டினை கடிப்பது ஏன் தெரியுமா? – இப்படி ஒரு விஷயம் இருக்கா?

ஆனால் அவர் என்னை ரன் ஓட விட்டு விட்டார். அதனால் நான் மிகவும் களைத்து போய்விட்டேன். இருப்பினும் சிறந்த வீரருடன் பேட்டிங் செய்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இந்த போட்டியில் எங்களது அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது மிகப்பெரிய ரன்குவிப்பிற்கு வழி வகுத்தனர். அவர்கள் கொடுத்த நல்ல துவக்கத்தினாலே இந்த போட்டியில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றுள்ளோம் என்று பிராவோ கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement