ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. அந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த வேளையில் இரண்டாவது போட்டியின் போது 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அந்த டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்த தொடரை இந்திய அணி சமன் செய்து வரலாறு படைத்திருந்தாலும் இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான டெஸ்ட் அணியில் இருந்து அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஏனெனில் வெளிநாடுகளில் கடந்த பல ஆண்டுகளாக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அனுபவம் வாய்ந்த இரண்டு வீரர்களையும் இப்படி ஒரேடியாக இந்திய அணியில் இருந்து கழட்டி விட்டது தவறான முடிவு என்றும் இளம் வீரர்களுக்கு வெளிநாடுகளில் விளையாட போதிய அனுபவம் தேவை என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
அந்த வகையில் சத்தீஸ்வரர் புஜாரா இதுவரை இந்திய அணிக்காக 103 போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். இப்படி கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட அவரை தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து நீக்கியது தவறு என்றும் ரசிகர்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தன்னை இந்திய அணியில் இருந்து நீக்கியது தவறுதான் என்று நிரூபிக்கும் வகையில் புஜாரா தனது சிறப்பான செயல்பாட்டை தற்போது ரஞ்சி தொடரில் வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக விளையாடிய சௌராஷ்டிரா அணியின் நட்சத்திர வீரரான புஜாரா 163 பந்துகளில் சதம் அடித்து ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் தனது 61-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க : அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலககோப்பையில் விராட் கோலி கண்டிப்பா ஆடனும் – பின்னணியில் ஐ.சி.சி
இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்றே பெயரெடுத்த மாபெரும் வீரரான புஜாராவை இந்திய அணி வெளியேற்றியது தவறு என்று நிரூபிக்கும் வகையில் அவர் இந்த சிறப்பான சதத்தின் மூலம் தேர்வாளர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் என்றும் ரசிகர்கள் அவரது இந்த சதத்தை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.