அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலககோப்பையில் விராட் கோலி கண்டிப்பா ஆடனும் – பின்னணியில் ஐ.சி.சி

Kohli-and-ICC
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது மீண்டும் ஒருமுறை ஐசிசி சாம்பியன்ஷிப்பை கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு தற்போது தங்களது பயணத்தை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் எதிர்வரும் இந்த 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அதைதொடர்ந்து எவ்வித சர்வதேச டி20 போட்டியிலும் இதுவரை பங்கேற்காமல் இருந்து வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் தாங்கள் விளையாட விருப்பம் உள்ளதாக இருவருமே தெரிவித்துள்ளதால் அவர்களை அணிக்கு கொண்டு வர வேண்டும் என்ற பேச்சுக்களும் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மீண்டும் அவர்கள் இருவரும் கம்பேக் கொடுப்பார்களா? என்பது ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணித்தேர்வின் மூலம் தெரியவரும்.

இந்நிலையில் எதிர்வரும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்காவில் நிச்சயம் விராட் கோலி விளையாடியே ஆக வேண்டும் என்று ஐசிசி பிசிசிஐ அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இதற்கு முக்கிய காரணமே உலகின் பணக்கார நாடான அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டிகள் நாளடைவில் வளரும் பட்சத்தில் அங்கிருந்து பெரியளவில் வருமானத்தை ஈட்ட முடியும். எனவே இந்த தொடருக்காக ஒரு பெரிய பிரபலம் தேவை. அந்த வகையில் உலகெங்கிலும் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை கொண்ட விராட் கோலி அமெரிக்காவில் விளையாடுவதன் மூலம் அமெரிக்காவிலிருந்தும் ரசிகர்களைப் பெற்று அங்கும் வருமானத்தை ஈட்ட முடியும்.

இதையும் படிங்க : அப்படி இருந்த நீங்க இப்படி மாறுனது அபாரமானது.. ஓய்வு பெற்ற வார்னருக்கு லெஜெண்ட் சச்சின் பாராட்டு

இதன் காரணமாக ஐசிசி நிர்வாகமானது டி20 உலகக்கோப்பையில் விராட் கோலியை விளையாட வைக்குமாறு பிசிசிஐ-யிடம் வேண்டுகோள் வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக நிச்சயம் பிசிசிஐ-நிர்வாகமானது விராட் கோலியை உலகக்கோப்பை அணியில் இணைக்கும் என்று பிசிசிஐக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement