ரபாடா என்னிடம் இதை செய்ய முயன்றார். ஆனால் நான் கண்டுகொள்ளவில்லை – புஜாரா பேட்டி

Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று புனே மைதானத்தில் துவங்கியது.

Kohli

- Advertisement -

அதன்படி முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளில் இழந்து 273 ரன்களை குவித்துள்ளது. அகர்வால் 108 ரன்களில் ஆட்டமிழக்க, கோலி தற்போது 63 ரன்களுடன் களத்தில் உள்ளார். தற்போது இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய புஜாரா கூறியதாவது : ரபாடா என்னிடம் வந்து ஸ்லெட்ஜ் செய்ய முயன்றார். ஆனால் நான் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ரபாடா என்னை நோக்கி வந்து என்ன சொன்னார் என்பது சரியாக எனக்கு நினைவில்லை. ஆனால் எந்த ஒரு பேட்ஸ்மேன் களத்தில் நின்றாலும் அவர்களை நோக்கி சென்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்.

Pujara

ஒரு பேட்ஸ்மேனாக அவர் என்னை கவனம் இழக்கச் செய்ய திசை திருப்புகிறார் என்பது மட்டும் எனக்கு புரிந்தது. இவர் மட்டுமல்ல எந்த ஒரு பந்து வீச்சாளரும் ஏதாவது பேசிக் கொண்டேதான் இருப்பார்கள். அதனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நான் கவனிக்க மாட்டேன் ஏனென்றால் நான் பேட்டிங்கை மட்டுமே செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். அதிலிருந்து எப்போதும் மாறக்கூடாது என்ற மனநிலையில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றும் புஜாரா கூறினார்.

Advertisement