100 ஆவது டெஸ்ட் போட்டியில் இப்படியா நடக்கனும்? மோசமான சாதனைக்கு ஆளான – சத்தீஸ்வர் புஜாரா

Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று பிப்ரவரி 17-ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இந்திய அணியின் அனுபவ வீரரான சத்தீஷ்வர் புஜாராவின் நூறாவது போட்டியாக அமைந்தது. இந்த போட்டிக்கு முன்னதாக அவருக்கு சுனில் கவாஸ்கர் நூறாவது டெஸ்ட் போட்டிக்கான தொப்பியினை வழங்கி கவுரவித்து இருந்தார்.

Pujara

- Advertisement -

அந்த கவுரவிப்பு விழாவின் போது பேசிய கவாஸ்கர் : இந்திய வீரர்களில் யாரும் தங்களது நூறாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததில்லை. எனவே நூறாவது போட்டியில் சதம் அடிக்கும் முதல் இந்தியராக நீங்கள் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தங்களது முதல் இன்னிங்சை 263 ரன்களுக்கு இழந்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் குவித்திருந்தது. இந்நிலையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் 17 ரன்கள் எடுத்திருந்த ராகுல் முதல் விக்கட்டாக ஆட்டம் இழந்து வெளியேறினார்.

Pujara 1

பின்னர் ரோகித் சர்மாவும் 32 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் குறிப்பாக நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் புஜாரா மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது.

- Advertisement -

இவ்வேளையில் இந்த முதல் இன்னிங்சில் 7 பந்துகளை சந்தித்த புஜாரா ரன்கள் எதுவும் எடுக்காமல் டவுட் ஆகி வெளியேறினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஒரு மோசமான சாதனைக்கும் சொந்தக்காரராக மாறியுள்ளார். அந்த வகையில் தங்களது நூறாவது டெஸ்ட் போட்டியில் டக் அவுட்டான வீரர்களின் வரிசையில் தற்போது எட்டாவது வீரராக புஜாராவும் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : போதும்டா சாமி. அவரை மொதல்ல டீம்ல இருந்து தூக்குங்க. இந்திய வீரருக்கு எதிராக – ரசிகர்கள் கருத்து

இதற்கு முன்னதாக நூறாவது டெஸ்ட் போட்டியில் திலீப் வெங்சர்க்கார், ஆலன் பார்டர், கார்ட்னி வால்ஸ், மார்க் டைலர், ஸ்டீபன் பிளமிங், பிரன்டன் மெக்கல்லம், அலைஸ்டர் குக் போன்ற வீரர்களின் வரிசையில் புஜாரா தற்போது எட்டாவது வீரராக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement