கடந்த 10 ஆண்டுகளில் யாரும் படைக்காத சாதனையை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக படைத்த புஜாரா – விவரம் இதோ

Pujara-1
- Advertisement -

ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இன்று துவங்கி விளையாடி வருகிறது. இன்று காலை 8:30 மணிக்கு அடிலெய்டு மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பகல் இரவு டெஸ்ட் போட்டி என்பதால் முதலில் பேட்டிங் செய்தால் மைதானம் சாதகமாக அமையும் என்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்திய அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 180 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரிகளுடன் 74 ரன்களை குவித்தார். புஜாரா 43 ரன்களையும், ரஹானே 42 ரன்கள் குவித்தனர். இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் விருத்திமான் சஹா 25 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த நிலையிலும், அஸ்வின் 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் 160 பந்துகளை சந்தித்த புஜாரா 43 ரன்கள் எடுத்து மீண்டும் ஒரு நிதானமான ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெளிப்படுத்தினார். இந்த நிதானமான ஆட்டத்தின் மூலம் கடந்த பத்து வருடங்களில் யாரும் செய்யாத சாதனை ஒன்றை அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக செய்துள்ளார். அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்ற சாதனையை அவர் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

pujara 2

மேலும் மற்றவர்களை காட்டிலும் 12 இன்னிங்ஸ்கள் குறைவாகவே அவர் நிறைய பந்துகளை சந்தித்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு கடினமான வீரர் என்பதை நிரூபித்துள்ளார். இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 28 இன்னிங்ஸ்களை சந்தித்து விளையாடியுள்ள புஜாரா 3609 பந்துகளை சந்தித்துள்ளார். இதன்மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக ஜோ ரூட் 46 இன்னிங்ஸ்களில் 3607 பந்துகளையும், அலெஸ்டர் குக் 40 இன்னிங்ஸ்களில் 3274 பந்துகளையும், விராட்கோலி 35 இன்னிங்ஸ்களில் 3115 பந்துகளையும் எதிர் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement