IND vs WI : இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அமைதியை உடைத்து பதிலடி கொடுத்துள்ள – புஜாரா

Pujara
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என மிக பெரிய தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது தற்போதே ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் பிசிசிஐ-யின் மூலம் அதிகாரவபூர்வமாக வெளியிடப்பட்டது. அதன்படி அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணியில் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான புஜாரா அதிரடியாக அணியிலிருந்து கழட்டி விடப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் பேசு பொருளாக மாறி உள்ளது. ஏனெனில் இந்திய அணிக்காக 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அனுபவம் கொண்ட அவரை இப்படி நீக்கியது தவறு என்று முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கூறிவருகின்றனர்.

இருந்தாலும் ஏற்கனவே கடந்த ஆண்டு இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டபோது இங்கிலாந்து சென்று கவுண்டி போட்டியில் தனது திறமையை நிரூபித்து மீண்டும் இந்திய அணிகள் இடம் பிடித்த புஜாரா அதேபோன்று தற்போது உள்ளூர் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இழந்த இடத்தை பிடிக்க பயிற்சி எடுத்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு இந்திய அணியின் தேர்வுக்குழுவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது புஜாரா தனது மௌனத்தை கலைத்து தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் ஒரு வீடியோவினை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : 4 ஓவரில் 50 ரன் கொடுத்தாங்கன்னு நினைக்காதீங்க, அந்த 3 பேர் தான் நம்மளோட வருங்காலம் – இளம் பவுலர்களை ஆதரித்த இசாந்த் சர்மா

அதில் புஜாரா பேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பது போன்ற சில வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் அணியிலிருந்து கழட்டி விடப்பட்டாலும் என்னுடைய பயிற்சியை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருப்பேன் என்றும் விட்ட இடத்தை பிடிக்காமல் விடமாட்டேன் என்றும் புஜாரா மறைமுகமாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement