- Advertisement -
இந்திய கிரிக்கெட்

துலீப் கோப்பையிலும் டாட்டா.. புஜாரா, ரஹானேவின் கேரியரை முடிக்கும் பிசிசிஐ.. வாய்ப்பு பெறும் 2 புதுமுக வீரர்கள்

இந்தியாவின் புகழ்பெற்ற துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 5 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா ஏ, பி, சி, டி ஆகிய 4 அணிகள் களமிறங்கும் அந்தத் தொடரில் விளையாடப் போகும் வீரர்களை பிசிசிஐ விரைவில் அறிவிக்க உள்ளது. குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்க உள்ளது.

எனவே அதற்கு தயாராவதற்காக துலீப் கோப்பையில் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா போன்ற சீனியர்களை விளையாட வைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அத்துடன் ஜஸ்ப்ரித் பும்ரா தவிர்த்து ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், அக்சார் பட்டேல் உள்ளிட்ட பெரும்பாலான நட்சத்திரம் இந்திய வீரர்களை அந்தத் தொடரில் விளையாட வைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

- Advertisement -

முடியும் கேரியர்:
இந்நிலையில் 2024 துலீப் கோப்பை தொடரில் செட்டேஸ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே ஆகியோரை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக புதிய செய்தி தெரிவிக்கிறது. கடந்த 2011 முதல் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய அவர்கள் சமீப காலங்களில் பெரிய ரன்கள் குவிக்க தடுமாறி வருகின்றனர்.

அதனால் 2023 வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் ரகானேவையும் 2023 ஆஸ்திரேலிய தொடருடன் புஜாராவையும் பிசிசிஐ கழற்றி விட்டது. இருப்பினும் மனம் தளராமல் போராடும் ரகானே கேப்டனாக 2023/24 ரஞ்சிக் கோப்பை மும்பைக்கு வென்று கொடுத்தார். அதே போல இந்திய அணியில் கம்பேக் கொடுக்க இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி தொடரில் புஜாரா தொடர்ந்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

இருப்பினும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 36 வயதை கடந்து விட்ட அவர்களை 2024 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பிசிசிஐ கழற்றி விட்டது. அவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் வாய்ப்பு பெற்றனர். அந்த வாய்ப்பில் அந்த 2 இளம் வீரர்களுமே அரை சதமடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்கள். அதனால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வளர்க்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

இதையும் படிங்க: சூரியகுமார் ஆசைப்பட்டாலும் அது கிடைக்காது.. அகர்கர் சொன்னதை மறந்துட்டீங்களா.. ஆகாஷ் சோப்ரா கருத்து

எனவே 2024 துலீப் கோப்பையில் விளையாட சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதே காரணத்தால் ரகானே, புஜாரா ஆகியோரை துலீப் கோப்பையில் கூட பிசிசிஐ தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என்று தெரிய வருகிறது. அதனால் இந்திய அணியில் இனிமேல் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே சொல்லலாம். அதன் காரணமாக புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரின் இந்திய கேரியர் கிட்டத்தட்ட முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -