- Advertisement -
இந்திய கிரிக்கெட்

5 ஓவர்ஸ்.. முன்ன மாதிரி இல்ல.. கமின்ஸை விட டேஞ்சரான ஸ்டார்க்கை அடிக்க இந்திய அணிக்கு புஜாரா அட்வைஸ்

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் அந்தப் தொடரின் நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்க உள்ளது. முன்னதாக இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் 14 விக்கெட்டுகள் எடுத்து ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2 ஆஸ்திரேலிய தொடர்களில் ஸ்டார்க் கொஞ்சம் சுமாராக வீசியதால் தங்களைப் போன்ற இந்திய பேட்ஸ்மேன்களால் எளிதாக அடிக்க முடிந்ததாக புஜாரா கூறியுள்ளார். ஆனால் தற்போது மீண்டும் ஸ்டார்க் முன்னேற்றத்தை சந்தித்துள்ளதால் எதிர்கொள்வது கடினமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே முதல் 5 ஓவரில் அவரை நன்றாக எதிர்கொண்டு பந்து பழையதான பின்னர் அடிக்கலாம் என்று புஜாரா ஆலோசனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சவாலான ஸ்டார்க்:

இது பற்றி புஜாரா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்தத் தொடரில் ஸ்டார்க் அவர்களுடைய சிறந்த பவுலராக இருக்கிறார். கடந்த ஒன்றரை வருடங்களில் அவர் தனது பந்து வீச்சில் முன்னேற்றத்தை செய்துள்ளார். அவரிடம் ஏற்கனவே நிறைய திறமையும் இருக்கிறது. என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் கடந்த 2 தொடர்களில் அவருக்கு எதிராக ரன்கள் குவிக்க முடியும் என்று நாங்கள் உணர்ந்தோம்”

“ஆனால் தற்போது அவருடைய துல்லியம் முன்னேறியுள்ளது. சில சுமாரான பந்துகளை வீசினாலும் அவர் ஸ்டம்ப் லைனில் பெரும்பாலான பந்துகளை நல்ல லென்த்தில் போடுகிறார். அவருக்கு ஸ்விங் கிடைப்பதால் தற்போது மீண்டும் வித்தியாசமான பவுலராக வந்துள்ளார். அதனால் ஹேசல்வுட், பட் கமின்ஸ் ஆகியோரை விட அவர் மிகவும் ஆபத்தான பவுலராகவும் திகழ்கிறார்”

- Advertisement -

புஜாரா அட்வைஸ்:

“எனவே அவருக்கு எதிராக குறிப்பாக புதிய பதில் நாம் நன்றாக விளையாட வேண்டும். அவர் பெரும்பாலான விக்கெட்டுகளை முதல் 5 ஓவர்களில் தான் எடுத்துள்ளார். எனவே அந்த 5 ஓவர்கள் நாம் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். அந்த இடத்தில் சமாளித்து அவரை 2, 3வது ஸ்பெல்லில் எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் அப்போது அவர் களைப்பாக இருப்பார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 211 ரன்ஸ்.. மந்தனா மெகா உலக சாதனை.. வெ.இ அணியை மிரட்டிய இந்தியாவும் உலக சாதனை வெற்றி

குறிப்பாக ஜெய்ஸ்வால் இந்தத் தொடரில் அவருக்கு எதிராக மிகவும் தடுமாறி வருகிறார். எனவே புஜாரா சொல்வது போல ஆரம்பத்தில் அவரை நிதானமாக எதிர்கொண்டால் பின்னர் எளிதாக ரன்கள் குவிக்கலாம். இதைத் தொடர்ந்து 4வது போட்டி பாக்ஸிங் டே போட்டியாக மெல்போர்னில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -