- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஃபார்முக்கு திரும்ப இதை செய்ங்க.. இந்தியாவின் வெற்றி உறுதி.. ரோஹித்துக்கு புஜாரா, ஹர்பஜன் அட்வைஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக தன்னுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா ஃபார்முக்கு திரும்பவது அவசியமாகிறது. ஏனெனில் சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக அவருடைய தலைமையில் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா சொந்த மண்ணில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது.

அந்தத் தொடரில் சுமாராக பேட்டிங் செய்த ரோகித் சர்மா தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். அந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய ஆரம்பத்தில் முன்னிலை பெற்றது. ஆனால் ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய இரண்டாவது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

புஜாரா அட்வைஸ்:

அந்தப் போட்டியிலும் ரோகித் சர்மா கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் தாக்கத்தை ஏற்படுத்தாதது தோல்வியை கொடுத்தது. இந்நிலையில் ரோகித் சர்மா ஃபார்முக்கு திரும்பினால் இந்தியா மீண்டும் வெற்றி நடை போடும் என்று புஜாரா தெரிவித்துள்ளார். அதற்கு புஜாரா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கொடுத்த ஆலோசனை பின்வருமாறு.

“ரோகித் சர்மா கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் முதலில் முடிந்தளவுக்கு சீக்கிரமாக ஃபார்முக்கு திரும்ப வேண்டும். ஏனெனில் அவர் ரன்கள் அடிக்கும் போது அது அவருடைய கேப்டன்ஷிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே போல ரோஹித் சர்மா ஃபார்மில் இல்லாத போது அதுவும் அவருடைய கேப்டன்ஷிப்பில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். எப்படி ரன்கள் அடிக்க வேண்டும் என்று தெரியும் அளவுக்கு ரோஹித் சர்மா அனுபவமிக்கவர்”

- Advertisement -

ஹர்பஜன் நம்பிக்கை:

“தற்போது சுமாரான காலங்களில் இருக்கும் அவர் நல்ல துவக்கத்தை பெறுவது ஃபார்முக்கு திரும்பதுவதற்கு தேவையான முக்கியமான விஷயமாகும். அதற்கு முதலில் அவர் திடமாக பேட்டிங் செய்து 20 அல்லது 30 ரன்கள் குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பின்னர் அதைப் பயன்படுத்தி அவரால் பெரிய ரன்கள் குவிக்க முடியும். அதற்கு முதல் ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் களத்தில் செட்டிலாகி விளையாடுவதில் அவர் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 2021இல் இந்தியா வரலாறு படைத்த காபா பிட்ச் இம்முறை எப்படி இருக்கும்? மைதான தயாரிப்பாளர் பேட்டி

இது பற்றி ஹர்பஜன் சிங் பேசியது பின்வருமாறு. “ரோஹித் ரன்கள் குவிக்கும் போது நன்றாக சிந்தித்து சிறந்த முடிவுகளை எடுப்பார். நீங்கள் எவ்வளவு நல்ல வீரராக இருந்தாலும் சொந்த செயல்பாடுகள் மிகவும் முக்கியம். நீங்கள் தனிப்பட்ட ரன்கள் குவிக்கும் போது முடிவுகளையும் நன்றாக இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே ரோஹித் ரன்கள் குவிப்பது அவருடைய கேப்டன்ஷிப் முன்னேறும்” என்று கூறினார்.

- Advertisement -