இந்திய அணியில் இவரோட பவுலிங்கை எதிர்த்து விளையாடியது ரொம்ப கஷ்டமா இருக்கு – புகோவ்ஸ்கி ஓபன்டாக்

Pucovski
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது 7 ஆம் தேதி துவங்கி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் அறிமுக வீரர் புகோவ்ஸ்கி ஆகியோர் களமிறங்கினர். இதில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த வார்னர் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மற்றொரு தொடக்க வீரரான புகோவ்ஸ்கி தனது அருமையான ஆட்டத்தை அறிமுக போட்டியிலேயே வெளிப்படுத்தினார். 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்த அவர் முன்னதாக இரண்டு முறை எளிதான கேட்ச் வாய்ப்புகளில் இருந்து தப்பித்தார். 26 ரன்களுக்கு ஒரு முறையும், 32 ரன்களில் ஒரு முறையும் அவர் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பினார். இந்த இரண்டு கேட்ச்யையுமே இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பண்ட் தான் தவறவிட்டார்.

இந்நிலையில் இந்த போட்டியில் அறிமுகமான புகோவ்ஸ்கி 62 ரன்களை அடித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஏனெனில் அறிமுக வீரராக இவர் இந்தியா போன்ற பலமான அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியது அனைவரது பாராட்டுகளையும் பெற்று தந்துள்ளது. இந்நிலையில் இன்று தான் இந்தியப் அவர்களை எதிர்த்து விளையாடியது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசினார்.

pucovski 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய பவுலர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசுகின்றனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. ஆனால் என்னை பொறுத்தவரை ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தை எதிர்கொள்ள மிகவும் சவாலாக இருக்கிறது. ஏனெனில் அவர் வித்தியாசமான கோணங்களில் இருந்து பல விதமான பந்துகளை வீசி வருகிறார்.

pant 1

அதுமட்டுமின்றி அதுபோன்ற பந்துகளை நான் இதுவரை எதிர்கொண்டு விளையாடியதில்லை என்றும், அவரைப்போன்ற பவுலரை எதிர்த்து விளையாடுவது எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமே மிகவும் சவாலான ஒன்று என்று அஸ்வினின் பந்துவீச்சை பாராட்டி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement